1. வாழ்வும் நலமும்

இன்றைய சூழலில் நம் உடல்நலம் காக்க தூதுவளை தான் தேவை!

R. Balakrishnan
R. Balakrishnan
Benefits of Solanum Trilobatum

சளி, இருமல், காய்ச்சல் முதலான உடல்நலக் கோளாறுகளை சமாளிப்பதற்கான எளிய வழி வகை களில் தூதுவளையும் (Solanum Trilobatum) ஒன்று. உணவாகவும், மருந்தாகவும் பெருமளவில் பயன்படக்கூடிய தூதுவளைக்கு ‘கபநாசினி’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

நன்மைகள்

தூதுவளை மூலிகையின் அனைத்து பாகங்களுமே (இலை , தண்டு, பூ, காய், கனி, வற்றல்) இருமல், சளி முதலிய நோய்களிலிருந்தும், கண் நோய், எலும்பு நோய், காது நோய்களுக்கெல்லாம் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

தூதுவளையின் இலைகள் மூச்சுப்பாதையில் கோழையகற்றி செய்கையை வெளிப்படுத்தி இருமல், இரைப்பு நோய்களைக் குணப்படுத்தக் கூடிய தன்மை வாய்ந்தது.

தினந்தோறும் காலையில் ஒரு கைப்பிடி தூதுவளை இலையும், 3 அல்லது 5 மிளகும் சேர்த்து மென்று சாப்பிட கப நோய்கள் குணமாகும்.

இலைகளைத் துவையல், குழம்பு செய்து சாப்பிட கோழைக்கட்டு நீங்கும். இலையை எண்ணெய் விட்டு வதக்கி துவையல் செய்து உண்டு வர மார்புச் சளி, இருமல், நீரேற்றம் முதலியவை கட்டுப்படும்.

தூதுவளையைக் கொண்டு செய்யப்படும் குடிநீருடன் (கஷாயம்) தேன் கலந்து பருக சுரம், ஐய சுரம், வளி சுரம் இவை அனைத்தும் குணமாகக் கூடும்.

தூதுவளை பற்றிய அறிவியல் ஆய்வு கட்டுரைகள் பல, அதற்கு நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தி, ஈரலைப் பாதுகாக்கும் குணம் இருப்பதாக நிரூபித்துள்ளன. மேலும், நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் தன்மையும் இருப்பதாக கூறுகின்றன.

தூதுவளை கீரையை சமையலில் சாம்பார், ரசம், துவையல் போன்ற முறைகளில் தயாரித்து பயன்படுத்தலாம். இதை குழந்தைகளுக்கு குறைந்த அளவு கொடுக்கலாம். சளி தொந்தரவுகள் இருப்பவர்கள் பிரச்னை தீரும் வரையும் மற்றவர்கள் வாரத்திற்கு 2 முறையும் பயன்படுத்தலாம்.

Read More

மணக்கும் மலர்களில் புதைந்துள்ள அற்புதமான மருத்துவப் பயன்கள்!

முதியவர்கள் கீழே விழுவதை தவிர்க்க சில ஆலோசனைகள்!

English Summary: In today's world we need an Solanum Trilobatum to protect our health! Published on: 30 September 2021, 08:11 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.