இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 6 October, 2021 1:40 PM IST
Black Urad dal is harmful to health!

கருப்பு உளுந்தின் பக்க விளைவுகள்

பல ஊட்டச்சத்துக்கள் கருப்பு உளுந்தில் காணப்படுகின்றன, எனவே இது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. ஆனால் அதிகப்படியான நுகர்வு நம் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும்

கருப்பு உளுந்து மற்றும் அதன் பக்க விளைவுகள்:

தோல் உரிக்கப்பட்ட கருப்பு உளுத்தம் பருப்பை சாப்பிடுவது எவ்வளவு சுவையாக இருக்கிறதோ, அதே அளவு ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். இதில் புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, வைட்டமின் பி 6, இரும்பு, ஃபோலிக் அமிலம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது நமது இதயத்திற்கும் நரம்பு மண்டலத்திற்கும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது.

நன்மைகள் என்ன?

ஒன்எம்ஜி -யின் கூற்றுப்படி, இந்த பருப்பு உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தும் தன்மையை கொண்டிருக்கிறது மற்றும் பல நோய்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக செயல்படுகிறது. ஆயுர்வேதத்தில், தலைவலி, இரத்தக் கசிவு, கல்லீரல் வீக்கம், பக்கவாதம், மூட்டு வலி, புண், காய்ச்சல், வீக்கம் போன்றவற்றைக் குணப்படுத்த இது பயன்படுகிறது, ஆனால் மறுபுறம், கருப்பு உளுத்தம் பருப்பை உட்கொள்வது உங்களுக்கு சிலவகையான  தீங்குகளை விளைவிக்கும் .

தீமைகள் என்ன?

யூரிக் அமிலத்தை அதிகரிக்கும். கருப்பு உளுத்தம் பருப்பை அதிகமாக உட்கொண்டால், இரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது, இது உங்கள் சிறுநீரகத்தில் கால்சிஃபிகேஷன் கற்களை ஏற்படுத்தும். இத்தகைய சூழ்நிலையில், சிறுநீரக பிரச்சினைகள் அல்லது சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் உளுத்தம் பருப்பை சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

கீல்வாதம் 

கீல்வாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் உளுத்தம் பருப்பை உட்கொள்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது. கருப்பு உளுத்தம் பருப்பை உட்கொள்வது பிரச்சனைகளை அதிகரிக்கலாம். இது மட்டுமல்ல, யாரேனும் உளுத்தம் பருப்பை அதிகமாக உட்கொண்டால், அவருக்கு பித்தப்பை கற்கள் அல்லது கீல்வாதம் போன்ற  பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இது போன்ற சூழ்நிலையில், நீங்கள் கீல்வாதத்திற்கான  மருந்தை உட்கொள்பவராக இருந்தால், உளுத்தம் பருப்பை உட்கொள்ள வேண்டாம்.

அஜீரண பிரச்சனை

அதிகப்படியான நுகர்வு அஜீரணத்தை ஏற்படுத்தும். இது மட்டுமல்லாமல், உளுத்தம் பருப்பை அதிகமாக உட்கொண்டால் மலச்சிக்கல் ஏற்படும் பிரச்சனையும் இருக்கும். இத்தகைய சூழ்நிலையில், வாயு பிரச்சினைகள், மலச்சிக்கல் அல்லது அஜீரணம் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் மருத்துவரை அணுகிய பின்னரே அதை உட்கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க...

மானிய விலையில் உளுந்து விதை- விவசாயிகளுக்கு அழைப்பு!

English Summary: Black Urad dal is harmful to health!
Published on: 06 October 2021, 01:40 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now