1. தோட்டக்கலை

நெற்பயிருக்கு மாற்றாக எள், உளுந்து, கேழ்வரகு சாகுபடிக்கு மானியம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
https://tamil.krishijagran.com/horticulture/agricultural-machinery-at-subsidized-prices-for-farmers/

சிவகங்கை மாவட்டத்தில், நெற்பயிருக்கு மாற்றாக எள், உளுந்து கேழ்வரகு உள்ளிட்டவற்றைச் சாகுபடி செய்தால், மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மானாவாரி வேளாண்மை (Rainfed agriculture)

சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் தமிழ்நாடு நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை மேம்பாட்டிற்கான இயக்கம் நடப்பாண்டில் (2021-22) 400 எக்டேர் இலக்கில் 4 தொகுப்பு கிராமங்களில் செயல்படுத்தப்படுகிறது.

சாக்கோட்டை வட்டாரத்தில் நடப்பாண்டில் 5,000 எக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

பிரதானத் தொழில் (The main industry)

கடந்த பல வருடங்களாக நெல் மட்டுமே பிரதான பயிராக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மழை பற்றாக்குறை, காலம் தவறிய அதிக மழை போன்ற காரணங்களால் நெல்லில் விவசாயிகளால் அதிக மகசூல் எடுக்க முடியவில்லை.

கடந்தாண்டு காலம் தவறிய பெய்த அதிக மழையால் நெற்பயிரில் குலைநோய் தாக்கம் ஏற்பட்டு விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்தனர். இதனைக் கருத்தில்கொண்டு மானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இலக்கு (The goal)

அந்த வகையில், காரீப் பருவத்தில் 100 எக்டேர் எள், 50 எக்டேர் உளுந்து பயிரிடவும் ராபி பருவத்தில் 100 எக்டேர் எள், 100 எக்டேர் கேழ்வரகு, 50 எக்டேர் உளுந்து பயிரிடவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கிராமங்கள் தேர்வு (Select villages)

இத்திட்டத்தில் 100 எக்டேர் சாகுபடி பரப்பு கொண்ட தொகுப்பு கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் விவசாயிகள் கூட்டாக சிறுதானியங்கள் பயறு வகைகளை உற்பத்தி செய்யவும், விற்பனையை எளிதாக்கவும் வழிவகக்கிறது.

இதன் மூலம் தனி நபர் வருமானம் பெருக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக நடப்பாண்டில் சாக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ந.சண்முக ஜெயந்தி, வழிகாட்டுதலின்படி பானான்வயல், ஜெயங்கொண்டான், ஓ.சிறுவயல் மற்றும் கானாடுகாத்தான் ஆகிய நான்கு கிராமங்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளன.

விவசாயக் குழுக்கள் (Agricultural groups)

தேர்வு செய்யப்பட்டுள்ள தொகுப்பு கிராமங்களில் விவசாய உறுப்பினர்களை இணைத்து குழுக்கள் அமைக்கப் பட்டு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அதன் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட்டு இத்திட்டம் முறையாக செயல்படுத்தப்படுகிறது. கோடை உழவு செய்திட எக்டேர் ஒன்றுக்கு ரூ. 1250/- வீதம் வழங்கப்படுகிறது.

திரவ உயிர் உரங்கள் (Liquid bio-fertilizers)

தமிழ்நாடு நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் வேளாண்மை இடுபொருட்களான விதைகள் திரவ உயிர் உரங்கள் மற்றும் உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணிகள் குறிப்பிட்ட சதவிகித மானியத்தில் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க...

மேட்டூர் கால்வாயில் 13 ஆண்டுகளுக்கு பின் பாசனத்திற்கு நீர் திறப்பு

கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் வழங்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்!

English Summary: Subsidy for sesame, black gram and cashew cultivation as an alternative to paddy!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.