Buffalo milk health benefits: எருமை பாலில் பசுவின் பாலை விட கால்சியம் மற்றும் புரதம் அதிகம் காணப்படுகிறது. ஆரோக்கியமான எலும்புகள், பல் ஆரோக்கியம் மற்றும் இருதய ஆரோக்கியத்திற்கு எருமை பால் மிகவும் சிறப்புவாய்ந்தது. புரோட்டீன் மற்றும் கொழுப்புச்சத்து மிகுந்த எருமை மாட்டுப்பால் நம் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளைவழங்குகிறது. எனவே எருமை மாட்டுப்பாலில் என்னென்ன நன்மைகள் இருக்கின்றது என்று இங்கே பார்போம்.
* எருமைப்பாலில் (Buffalo Milk) புரதச்சத்து அதிகம் இருப்பதால் உடல் தசைகள் வலுவடையவும், ஆணழகனாகவும் மாற விரும்பும் இளைஞர்கள், அதிகப் புரதச்சத்து நிறைந்த எருமைப்பாலை தினமும் குடிப்பது நல்ல பலனைத் தரும். அதேபோல் உடலில் உள்ள என்சைம்கள் மற்றும் ஹார்மோன்களின் செயல்பாட்டிற்கும் எருமைப்பால் நல்லது.
* எருமைப்பால் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது: எருமைப்பால் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு மிக மிக சிறந்தது. ஒரு டம்ளர் எருமைப்பாலில் 412.4 கிராம் கால்சியம் இருக்கும். இந்த கால்சியம், ரத்த அழுத்தத்தை சமன்படுத்தி, இதயத்திற்கு ரத்தம் சீராகப் பாய்வதை வலுப்படுத்துகிறது.
* எருமைப்பாலில் மெக்னீஷியம், பாஸ்பரஸ் உள்ளிட்டவையும் இருப்பதால், எலும்பை வலுவடையச் செய்கிறது. மேலும் எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் பாதுகாக்கும் திறன் கொண்டது.
* எருமைப்பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் உள்ளது, எருமைப்பாலில் நிறைந்துள்ள வைட்டமின் A, வைட்டமின் C போன்றவை நோய் எதிர்ப்புச் சக்தியைத் அதிகரித்து உடலை நோய்கள் அண்ட விடாமல் தடுக்கின்றன. மேலும் இந்த இரு வைட்டமின்களும், மிகச் சிறந்த ஆன்டி-ஆக்ஸிடென்டுகளாக செயல்பட்டு, உடலை சுத்தம் செய்கிறது.
* எருமைப்பால் எடை அதிகரிக்க பயனளிக்கும், எடை அதிகரிக்க விரும்புபவர்கள் எருமை பாலை குடிக்கலாம். ஏனெனில் இதில் உள்ள கலோரிகளின் அளவு மிக அதிகமாக இருக்கின்றது. மேலும் இது உங்கள் உடலின் ஆற்றலையும் அதிகரிக்கிறது.
மேலும் படிக்க: