அன்றாட சமையலில் நறுமணத்தைக் கூட்டுவதற்கு ஏலக்காய் உதவுகிறது. ஏலக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். அவ்வகையில், ஏலக்காயை தொடர்ந்து சாப்பிடுவதால் தொப்பையை குறைக்க முடியும் என்று சொல்லப்படுகிறது. இது பற்றிய விளக்கத்தை இப்போது தெரிந்து கொள்வோம்.
உடல் எடைக் குறைக்கும் ஏலக்காய்
வயிற்று கொழுப்பை கணிசமாகக் கரைக்கும் ஏலக்காய் நறுமணத்திற்கு மட்டுமின்றி, உடல் எடையை குறைப்பதற்கும் உதவி புரிகிறது. பல நோய்கள் உண்டாக அடிப்படையான ஆதாரமாக உடல் பருமன் இருக்கிறது. அவ்வகையில், உடல் பருமனை தவிர்ப்பது தான் நலம். ஆகையால் தொடர்ந்து நாம் ஏலக்காயை சாப்பிடுவது, உடல் பருமனைக் குறைத்து, மேலும் எடை கூடுவதையும் தடுக்கிறது.
ஏலக்காயின் பயன்கள்
பொதுவாக உணவு மற்றும் இனிப்புப் பதார்த்தங்களில் சேர்க்கப்படும் ஏலக்காய் தேநீரிலும் பயன்படுத்தப்படுகிறது. உடலில் படியும் கொழுப்பை கரைக்கும் குணம் கொண்ட ஏலக்காயை, தினந்தோறும் உணவில் சேர்த்து வந்தால் இடுப்பு மற்றும் வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பு இயற்கையாகவே கரைந்து விடும்.
கொலஸ்ட்ரால் குறையும்
ஏலக்காயை தொடர்ந்து சாப்பிடுவது, செரிமான சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதனால் வயிற்றில் உண்டாகும் அமிலத் தன்மை, மலச்சிக்கல் மற்றும் வயிற்றில் எரியும் வாயு போன்ற பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். மேலும், செரிமான சக்தி அதிகரிப்பதன் காரணத்தால் உடல் எடை படிப்படியாக குறையும்.
புற்றுநோயைத் தடுக்கும்
ஏலக்காய் புற்று நோய் எதிர்ப்பு தன்மையை இயற்கையாகவே கொண்டுள்ளது. விலங்குகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி, ஏலக்காய் புற்று நோய் வராமல் தடுக்கவும், தள்ளிப் போடவும் உதவி செய்கிறது.
நீரிழிவு நோயாளிகள், ஆஸ்துமா மற்றும் இதய பாதிப்பு கொண்டவர்கள் என தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏலக்காய் நல்ல பலனை அளிக்கிறது.
மேலும் படிக்க
உடலை ஸ்லிம்மாக வைத்துக் கொள்ள ஸ்கிப்பிங் பயிற்சி மட்டும் போதும்!