1. வாழ்வும் நலமும்

உடலை ஸ்லிம்மாக வைத்துக் கொள்ள ஸ்கிப்பிங் பயிற்சி மட்டும் போதும்!

R. Balakrishnan
R. Balakrishnan
Skipping Excercise

தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதால், உடல் எடை கூடுவதை தவிர்க்க முடியும்‌. அதோடு, பல ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும். உடற்பயிற்சி செய்யும் போது நம் உடலில் கலோரிகள் எரிக்கப்படுகிறது. இதனால், தினசரி உடற்பயிற்சி அனைவருக்கும் தேவையான ஒன்றாகும்.

ஸ்கிப்பிங் உடற்பயிற்சி (Skipping Excercise)

பொதுவாகவே ஸ்கிப்பிங் என்பது ஒரு வகையான Cardio Exercise போன்றது எனலாம். இதனை செய்வதால், சீரான சுவாசத்தை ஏற்படுத்தி, இதயக் கோளாறு ஏற்படாமல் தடுத்து, இதயத்தை வலிமைப்படுத்துகிறது. மேலும், ஒரு நபர் தினந்தோறும் 15 முதல் 25 நிமிடங்களுக்கு, ஸ்கிப்பிங் உடற்பயிற்சியை செய்தால், மிகுதியான பல நன்மைகளைப் பெற முடியும். இந்த பயிற்சியினால் கை மற்றும் கால்களும் வலுவடையும்.

ஒரு நபர் ஸ்கிப்பிங் பயிற்சியை மேற்கொள்ளும் போது, கயிறு முன்னும் பின்னும் ஒரே சீரான வேகத்தில் சென்று வர வேண்டியது அவசியம். இதன் காரணமாக அந்த நபருக்கு கவனச் சிதறல் ஏற்பட வாய்ப்பே இருக்காது. அவ்வகையில் ஒருங்கிணைந்த எளிமையான மன ஆரோக்கியத்திற்கும், மனவலிமைக்கும் இது உதவுகிறது.

உடல் எடையை குறைக்கும் ஸ்கிப்பிங்

ஸ்கிப்பிங்கை ஒரு உடற்பயிற்சியாக தினந்தோறும் செய்யும் போது, உடல் எடையை அசுர வேகத்தில் குறைக்க முடியும் என்பது நிதர்சனமான உண்மை.

தொடர்ந்து ஒரு நபர் 10 நிமிடத்திற்கு ஸ்கிப்பிங் செய்வது, கிட்டத்தட்ட 8 கிலோ மீட்டர் ஓடுவதற்கு சமம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக ஒரு மணி நேரம் தொடர்ந்து ஸ்கிப்பிங் செய்தால், மிக எளிதாக நம் உடலில் இருக்கும் 1,600 கலோரிகளை எரிக்க முடியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்கிப்பிங் பயிற்சியின் நன்மைகள்

ஸ்கிப்பிங் விளையாட்டை தினசரி மேற்கொள்வதன் மூலமாக, வயிற்றில் அதிகமாக இருக்கும் சதைப் பகுதியை மிக எளிதாக குறைக்க முடியும்.

ஸ்கிப்பிங் பயிற்சி செய்யும் போது இயதத்தின் துடிப்பு சீராகிறது. இதனால் இருதய ஆரோக்கியம் மேம்பட ஸ்கிப்பிங் உதவி புரிகிறது.

உடலில் இருக்கும் தேவையற்ற மற்றும் கெட்ட கொழுப்புகளை கரைப்பதற்கு ஸ்கிப்பிங் பயிற்சி மிகச் சிறப்பாக உதவுகிறது.

ஸ்கிப்பிங் பயிற்சியில் உடலை மிக வேகமாக இயக்குவதால், இது உணவு செரிமானத்திற்கும் உதவியாக இருக்கிறது.

எலும்புகள் வலிமை ஆவதற்கு ஸ்கிப்பிங் விளையாட்டு அவசியமான ஒன்றாகும்.

குழந்தைகளுக்கு சிறுவயது முதலே, ஸ்கிப்பிங் பயிற்சியை சொல்லிக் கொடுத்து, தினசரி செய்ய ஊக்குவிக்க வேண்டும். உடற்பயிற்சியின் அவசியத்தை இளம் தலைமுறையினர் மற்றும் வருங்கால தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதும் நம் கடமையாகும்.

மேலும் படிக்க

அதிக உப்பு ஆபத்தானது: எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்!

நரைமுடியை கருப்பாக மாற்ற வெந்தயத்தை எப்படி சாப்பிட வேண்டும்?

English Summary: Skipping exercise is enough to keep the body slim! Published on: 23 January 2023, 10:07 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.