பொதுவாக முட்டைகளில் புரதங்கள், கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை நிரம்பியுள்ளன. அவை ஊட்டச்சத்துக்கு ஏற்ற ஆதாரமாக அமைகின்றன. ஆனால் கோடையில் பிரவுன் முட்டைகளை சாப்பிடுவது பாதுகாப்பானதா? என்பதைக் குறித்து இப்பகுதி விளக்குகிறது.
நிபுணர்களின் கூற்றுப்படி, பழுப்பு மற்றும் வெள்ளை முட்டைகளுக்கு உண்மையான வித்தியாசம் இல்லை. ஆனால் பெரும்பாலான முட்டை பிரியர்கள் பழுப்பு முட்டைகளின் சுவையால் இரண்டிற்கும் இடையே வேறுபாடு இருக்கின்றது எனக் கூறுகின்றனர். ஆனால் உண்மையில் பழுப்பு நிற முட்டைகள் மற்றும் வெள்ளை நிற முட்டைகள் ஒரே மாதிரியான ஊட்டச்சத்து கலவையைக் கொண்டுள்ளன. எனவே பழுப்பு மற்றும் வெள்ளை முட்டைகளுக்கு இடையிலான ஒரே வித்தியாசம் கோழிகள் எடுத்துக்கொள்ளும் உணவைப் பொறுத்தது ஆகும். அதுவே, இந்த முட்டைகளின் நிறம் மற்றும் சுவையை தீர்மானிக்கிறது.
பழுப்பு முட்டைகள் பெரும்பாலும் விலை உயர்ந்தவையாகும். டிஜிட்டல் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையின் கருத்துக்களின் படி, இந்த இரண்டு வகையான முட்டைகளையும் வேறுபடுத்துவதற்குச் சில காரணங்கள் மட்டுமே உள்ளன என்பது கூறப்படுகிறது. அதாவது, வெள்ளை நிற முட்டைகள் வெள்ளை நிற காது மடல்கள் கொண்ட கோழிகளால் இடப்படுகின்றன. அதே போன்று பழுப்பு நிற முட்டைகள் சிவப்பு காது மடல்களுடன், சிவப்பு இறகுகள் கொண்டு காணப்படுகின்ற கோழிகளால் இடப்படுகின்றன. வெள்ளைக் கோழிகளுடன் ஒப்பிடும்போது சிவப்பு இறகுக் கோழிகள் அதன் உடலளவில் பெரிய அளவில் இருப்பதால் அவற்றிற்கு உணவு அளிக்க அதிக தீவனம் தேவை. இந்நிலையில் கோழிகள் எடுத்துக் கொள்ளும் உணவைப் பொருத்தும் முட்டையின் அளவு மற்றும் நிறம் ஆகியன அமைகின்றன.
யுனைடெட் ஸ்டேட்ஸ் டிபார்ட்மெண்ட் ஆஃப் அக்ரிகல்ச்சர் (United Stated Department of Agriculture - USDA) கூற்றுப்படி, 100 கிராம் பழுப்பு முட்டையில் சுமார் 12.56 கிராம் புரதங்கள் உள்ளன. fcat இல், ஒரு பெரிய முட்டையில் (50 கிராம்) 72-80 கலோரிகள் மற்றும் 4.75 கிராம் கொழுப்பு உள்ளது. இதில் 1.5 கிராம் நிறைவுற்ற கொழுப்புகள் உள்ளன.
பிரவுன் முட்டைகள் சுமார் 72-80 கலோரிகளைக் கொண்டுள்ளன. இது ஆரோக்கியமான உணவை நிர்வகிக்க எளிதாக உதவும். இருப்பினும், கோடை காலத்தில் முட்டை சாப்பிடுவது செரிமானத்தை பாதிக்கும் என்பது பொதுவான கட்டுக்கதை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் முட்டைகள் இயற்கையில் சூடாகவும், உடலில் வெப்பத்தை உண்டாக்குவதாகவும் இருக்கும். ஆனால் கோடை காலத்தில் கூட முட்டைகளை மிதமாக உட்கொள்வதால், வெயில் பருவத்தில் உடலுக்குத் தேவையான மற்றும் போதுமான ஊட்டச்சத்தை அளிக்க முடியும்.
நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முட்டைகளை சாப்பிடுவது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை நிர்வகிக்க உதவும். அதோடு, உடலில் வெப்பத்தை அதிகரிக்காது. இருப்பினும், உடலில் அதிக வெப்பம் செரிமான பிரச்சனைகள், அசௌகரியம் மற்றும் வயிற்றுப்போக்குக்கு வழிவகுக்கும் என்பதால், உணவில் எதையாவது சேர்ப்பதற்கு முன் மருத்துவ ஆலோசனையைப் பெறுவது கூடுதல் நன்மை பயக்கும்.
மேலும் படிக்க