தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் முன்னேறியுள்ள தென் மேற்கு பருவமழை, அடுத்த 24 மணி நேரத்தில், மேலும் முன்னேற வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
வளி மண்டல சுழற்சி (Atmospheric circulation)
-
தமிழ்நாட்டின் தென் கடலோரத்தில் (1.5 கிலோ மீட்டர் உயரத்தில்) வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
-
இதேபோல், குமரிக்கடல் மற்றும் இலங்கை ஒட்டி (3.1 முதல் 4.5 கிலோ மீட்டர் உயரம் வரை) வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
-
இதனிடையே, கர்நாடகம் முதல் தென் தமிழ்நாடு வரை (1 கிலோ மீட்டர் உயரத்தில்) வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
04.06.2021
மிகக் கனமழை (Very heavy rain)
இதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும்.
கனமழை (Heavy rain)
மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மிதமான மழை (Moderate rain)
ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
05.06.2021
கனமழை (Heavy rain)
வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை (Chennai)
-
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
-
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைப் பெய்யக்கூடும்.
-
அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.
மழைபதிவு (Rainfall)
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாகக் கன்னியாகுமரி மாவட்டம் சித்தாறுவில் 14 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை (Warning for fishermen)
04.06.2021 முதல் 05.06.2021
-
குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடாப் பகுதிகளில் பலத்தக் காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
-
எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
04.06.2021, 05.06.2021
கேரளா மற்றும், கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
04.06.2021 முதல் 08.06.2021 வரை
-
தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
-
மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
கொரோனா நிவாரண நிதி: ரூ.2000 பெறாதவர்கள் இம்மாதம் பெற்றுக்கொள்ளலாம்!!
ஊரடங்கை பயனுள்ளதாக மாற்ற மரக்கன்றுகளை நடும் இளைஞர்கள்!
300 கிலோ உரத்தை 5 டன் உரப் பயன்பாட்டுக்கு சமமாக மாற்றுவது எப்படி?