இரண்டு அல்லது மூன்று அடுக்குகளால் தயாரிக்கப்படும் முகக் கவசங்கள் பயனுள்ளதாக கருதப்பட்டாலும், அவை பெரும்பாலும் ஃபேஷனுக்காக தான் உபயோகிக்கப்படுகிறது என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆரம்ப சுகாதார பேராசிரியர் ட்ரிஷ் கிரீன்ஹால்க் கூறியுள்ளார். ஒமைக்ரான் தொற்றானது தற்போது மக்கள் பயன்படுத்தும் வண்ணமயமான மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையிலான முகக்கவசங்கள் அணிவதை பற்றி மீண்டும் ஒருமுறைக்கு இருமுறை சிந்திக்க செய்துள்ளது.
N95 முகக் கவசம் (N95 Mask)
N95 மாதிரியான முக கவசங்களை தயாரிப்போர் அதை கிட்டத்தட்ட 95% கிருமிகளை (Gems) வடிகட்டுகிறதா என்பதை நிச்சயம் உறுதிசெய்ய வேண்டும். இருப்பினும் நீங்கள் உங்கள் வாய் மற்றும் மூக்கை முகக்கவசத்தால் சரியாக மூடவில்லையெனில் அவ்வாறு பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட முகக்கவசம் எந்தவித பயனையும் அளிக்காது.
துணியிலான முகக் கவசம் (Cloth Mask)
சுற்றுச்சூழல் குறித்தோ அல்லது பணம் குறித்தோ கவலை கொள்ளும் மக்கள் துணியிலான முக கவசத்தை நாடுகின்றனர். ஏனெனில் அவற்றை துவைத்து மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல தான் கிருமிகளை சிறந்த முறையில் வடிகட்டும் வகையிலும், மீண்டும் பயன்படுத்தக் கூடிய வகையிலும் உறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இறுக்கமான முகக்கவசங்களை அணிந்து கொள்வதற்கு பதிலாக, ஒற்றை அடுக்கு முகக்கவசத்தை அணிந்து கொள்ளலாம் என்று ஏற்கனவே கனடாவில் கூறப்பட்டுள்ளது.