1. செய்திகள்

ஒமிக்ரான் தொற்றைக் கண்டறிய புதிய கருவி: ICMR தகவல்!

R. Balakrishnan
R. Balakrishnan
New tool for detect Omicron virus

ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறிய நவீன தொழில்நுட்பம் வாய்ந்த கருவியை, ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உருவாக்கி உள்ளது. கொரோனா வைரஸ் பரவல் உலகம் முழுதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், சில மாதங்களுக்கு முன் பல்வேறு நாடுகளும் அதிலிருந்து மீளத் துவங்கின.

ஒப்பந்தம்

இதற்கிடையே தென் ஆப்ரிக்காவில் உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் மீண்டும் பல நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பை வழக்கமான ஆர்.டி.பி.சி.ஆர்., முறைக்கு மாற்றாக புதிய தொழில்நுட்பத்தில் கண்டறிவதற்கான ஆய்வுகளை அசாம் மாநிலம் திப்ரூகரில் உள்ள ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்டது.

முடிவில் ஒமிக்ரான் பாதிப்பை கண்டறியும் புதிய கருவியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தயாரித்து உள்ளது. இந்த கருவியை மேம்படுத்தி வணிக ரீதியில் தொழில்நுட்ப பரிமாற்றங்களுடன் தயாரிக்க, சர்வதேச நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக ஐ.சி.எம்.ஆர்., நேற்று வெளியிட்ட அறிக்கை: ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பை கண்டறியும் நவீன கருவியை நாங்கள் வடிவமைத்துள்ளோம். இதன் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி தொடர்பான ஒப்பந்தம் மேற்கொள்ளும் சட்டப்பூர்வ உரிமை எங்களிடம்உள்ளது.

'ஆன்லைன்' (Online)

நவீன கருவிகளை தயாரிப்பதில் ஆர்வம் உள்ள இத்துறையில் அனுபவம் வாய்ந்தவர்கள் 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பிக்கலாம். கருவிகளை தயாரிப்பது, சர்வதேச அளவில் சந்தைப்படுத்துவது, பயன்பாடு மற்றும் செயல்பாட்டு நடைமுறை, கருவிகளுக்கான 'ராயல்டி' உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளின் உரிமம் தொடர்பான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும்.

மேலும் படிக்க

இந்தியாவில் சதம் அடித்தது ஒமிக்ரான் தொற்று!

WHO எச்சரிக்கை: தடுப்பூசி போட்டாலும் கவனம் தேவை!

English Summary: New tool to detect Omicron infection: ICMR information! Published on: 21 December 2021, 07:04 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.