இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 28 September, 2021 4:46 PM IST
Cluster beans to keep the stomach clean and healthy!

ஆரோக்கியத்தை பராமரிக்க, பச்சை காய்கறிகளை உட்கொள்வது மிகவும் முக்கியம். தொடர்ந்து பச்சை காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலின் பல வகையான பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். பச்சை காய்கறிகளை சாப்பிடுவது வயிற்று பிரச்சனையிலிருந்து விடுவிப்பது மட்டுமல்லாமல், எடையை கட்டுக்குள் வைத்திருக்கிறது.

இந்த பச்சை காய்கறிகளில் ஒன்று கொத்தவரங்காய். கொத்தவரங்காய் கிளஸ்டர் பீன்ஸ் என்றும் அழைக்கப்படுகின்றன. பல வகையான சத்துக்கள் நிறைந்த கொத்தவரங்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

கொத்தவரங்காய் எடை குறைப்பதற்கு, இதயம் தொடர்பான பிரச்சினைகளை அகற்ற உதவுகின்றன.கொத்தவரங்காய் உடைய 3 பெரிய நன்மைகளைப் பற்றி பார்க்கலாம், இதன் காரணமாக நீங்கள் நிச்சயமாக உங்கள் உணவில் கொத்தவரங்காயை கண்டிப்பாக சேர்த்துக்கொள்வீர்கள்.

எடை குறைவாக உள்ளது

இன்றைய காலகட்டத்தில், அதிகமான மக்கள் எடை அதிகரிப்பால் சிரமப்படுகின்றனர். நீண்ட நேரம் வேலை செய்வது, வறுத்த உணவை சாப்பிடுவது உங்கள் உடல் பருமனுக்கு காரணமாக இருக்கலாம். அதிகரிக்கும் எடையை குறைக்க, கண்டிப்பாக கொத்தவரங்காய் உட்கொள்ளுங்கள். மற்ற காய்கறிகளை விட கொத்தவரங்காயில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது, இது எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது என்று கூறப்படுகிறது.

வயிற்று பிரச்சனைகளில் இருந்து விடுபட

மலச்சிக்கல் பிரச்சனையால் நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், கண்டிப்பாக உங்கள் உணவில் கொத்தவரங்காய் சேர்க்கவும். இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் போன்ற பிரச்சனையை பெரிய அளவில் குறைக்கிறது என்று கூறப்படுகிறது. ஜீரணக் கோளாறுகளை தொடர்ந்து அனுபவிப்பவர்கள் கொத்தவரங்காய் சாப்பிடுவதால் செரிமானப் பிரச்சினைகளையும் எளிதில் சமாளிக்க முடியும். அதன் பயன்பாடு வயிற்றை சுத்தமாக வைத்திருக்கிறது.

எலும்புகள் வலிமையாகின்றது

வலுவான எலும்புகளுக்கு கால்சியம் உட்கொள்ளல் மிகவும் முக்கியம். காய்கள் கால்சியத்தின் களஞ்சியமாக கருதப்படுகிறது. குவாரில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் எலும்புகளை வலுப்படுத்துவதோடு ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்காக, நீங்கள் காய்கறி அல்லது சாலட்டாக கொத்தவரங்காயை உட்கொள்ளலாம்.

மேலும் படிக்க...

கொத்தவரங்காய் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய நன்மைகள் வழங்குகின்றன.

English Summary: Cluster beans to keep the stomach clean and healthy!
Published on: 28 September 2021, 04:46 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now