சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 7 October, 2021 8:21 PM IST
Benefits of Coconut flower
Benefits of Coconut flower

தேங்காய்ப் பூவினை (Coconut flower) சிலர் ருசித்திருப்பார்கள். சாலையில் தள்ளுவண்டியில் அடுக்கி விற்கப்பட்டு வரும் தேங்காய்ப் பூவைப் பார்த்துக் கொண்டே ‘இது எதற்காக’ என்ற கேள்வியுடனே சிலர் கடந்து சென்றுகொண்டிருப்பார்கள். இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. தேங்காய், இளநீர் பயன்பாடு எல்லாம் பரவலாகவே இருக்கிறது. ஆனால், ‘தேங்காய்ப் பூ’ எதற்காக, என்ன பலன், வெறுமனே சுவை மட்டுமா போன்ற கேள்விகள் பலருக்கு இருக்கலாம்.

பயன்கள்

  • பருவ கால தொற்று நோய்களிலிருந்து முழுமையான பாதுகாப்பை தேங்காய்ப்பூ கொடுக்கும். தைராய்டு பிரச்னையில் பாதிக்கப்பட்டவர்கள் தேங்காய்ப்பூவை சாப்பிடுவதால் தைராய்டு சுரப்பை குணப்படுத்தலாம்.
  • தேங்காய்ப் பூ உண்பதால் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்கவும் முடிகிறது. இதில் குறைந்த அளவு கலோரி இருப்பதால் உடல் எடை குறைய உதவு கிறது. வளர்சிதை மாற்றத்தை தூண்டுவதால் கொழுப்பு சேராமல் வேகமாக உடல் எடையை குறைக்கவும் முடியும்.
  • வழக்கமாக தேங்காயை உண்கிறோம். இளநீராகவும் உண்கிறோம். தேங்காய்ப்பூ என்பது என்னவென்று சிலருக்கு குழப்பம் இருக்கும். முற்றிய தேங்காயில் உண்டாகும் கரு வளர்ச்சியே தேங்காய்ப்பூ ஆகும்.
  • புற்றுநோய் செல்களைத் (Cancer Cells) தூண்டுகிற ஃப்ரீ ரேடிக்கல்ஸை நம்முடைய உடலிலிருந்து வெளியேற்றும் ஆற்றலைக் கொண்டது தேங்காய்ப்பூ.
  • தேங்காய்ப்பூவில் தேங்காய் மற்றும் இளநீரில் இருப்பதைவிட அதிக சத்துக்கள் இருக்கிறது. தேங்காய்ப்பூவில் மிக அதிகமான ஊட்டச்சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி இரு மடங்கு அதிகரிக்கும்.
  • தேங்காய்ப்பூ இன்சுலின் (Insulin) சுரப்பை தூண்டுகிறது. இதனால் ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரையை கட்டுப்படுத்த இயலுகிறது. ஜீரண சக்தி குறைவாக இருந்தால் தேங்காய்ப்பூ சிறந்த மருத்துவமாகும். இதிலுள்ள மினரல், வைட்டமின் குடலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. மலச்சிக்கலை குணமாக்குகிறது.
  • தேங்காய்ப்பூவில் முக்கியமாக முதுமையைத் தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடெட் நிறைய உள்ளது. சுருக்கங்கள், வயதான தோற்றம், சரும தொய்வு போன்றவை நம்மை நெருங்க விடாது.

Also Read | பாதங்களை பாதுகாக்கும் பயனுள்ள பயிற்சிகள்: தெரிந்து கொள்வோம்!

  • சிறுநீரக பாதிப்பை குறைக்கும் திறன் தேங்காய்ப் பூவுக்கு உண்டு. மேலும் சிறுநீரகத் தொற்றுநோய்களையும் குணப்படுத்துகிறது. நச்சுக்களை வெளியேற்றி ஆரோக்கியமான சிறுநீரகத்தை தேங்காய்ப் பூவினால் பெறலாம்.
  • அதிக பணிச்சுமை உள்ளவர்கள் மன அளவிலும், உடலளவிலும் மிகவும் சோர்வாக இருப்பார்கள். அப்படி இருக்கும்போது தேங்காய்ப்பூவை சாப்பிட்டால் உடலுக்கு அதிக எனர்ஜி கிடைக்கும்.
  • இதயக் குழாய்களில் படிகிற கொழுப்புகள் மாரடைப்பையும் வேறு சில இதயம் தொடர்பான நோய் களையும் உண்டாக்குகிறது. இந்த கொழுப்பு தேங்கும் பிரச்னையை சரி செய்வதிலும் மிக சிறப்பாக தேங்காய்ப்பூ உதவுகிறது.
  • நம்முடைய சருமத்தை மிக இளமையாகவும், பொலிவுடனும் சருமச்சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருப்பதில் மிக முக்கிய பங்கு தேங்காய்ப்பூவுக்கு உண்டு. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் இளமையைத் தக்க வைத்திருக்க உதவுகிறது.
  • பெண்களுக்கு மாதவிடாய் நேரம் தவிர வெள்ளைப்படுதல் இருப்பதால் இந்த தேங்காய்ப்பூவை உட்கொள்வதால் சீர் செய்ய உதவுகிறது. அதுமட்டுமின்றி அதிக நாள் மாதவிடாய் ரத்தப்போக்கை சரி செய்ய தேங்காய்ப்பூவை உபயோகிக்கலாம்.
  • இளநீர் மட்டுமின்றி தேங்காய்ப்பூவுக்கும் உடற்சூட்டை தணிக்கும் தன்மை உண்டு. உடற்சூட்டினால் ஏற் படும் மூக்கிலிருந்து ரத்தம் கசிவதையும் தேங்காய்ப்பூ தடுக்கிறது.

மேலும் படிக்க

இன்றைய சூழலில் நம் உடல்நலம் காக்க தூதுவளை தான் தேவை!

தினமும் சத்து மாவு கஞ்சி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

English Summary: Coconut flower protects against seasonal infections
Published on: 07 October 2021, 08:21 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now