Health & Lifestyle

Monday, 11 April 2022 09:05 PM , by: Elavarse Sivakumar

காலையில் எழுந்தவுடன் நம் மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்ச்சி அளிப்பது என்றால், சொல்லாமலேயேப் புரியும். ஏனெனில் பல வீடுகளுக்கு இந்த மணம் இல்லாமல் காலை விடிவதே இல்லை. அந்த அளவுக்கு காலைவேளையும், இதுவும் பின்னிப்பிணைந்த ஒன்று.

ஆனால் காஃபி உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்று கூறப்படுவது உண்டு. அதேநேரத்தில், காஃபி குடிப்பதால் பல நன்மைகள் இருக்கிறது என்றாலும், அதனை எவ்வளவு குடிக்க வேண்டும் என்ற அளவு தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.

புத்துணர்ச்சியுடன் இருப்பதற்காக பலர் காபியுடன் நாளைத் தொடங்குகிறார்கள். காரணம் காபி குடித்தவுடன் உடலுக்கு உடனடி ஆற்றலைத் தருவதோடு, நல்ல உணர்வையும் தருகிறது. வகை 2 நீரிழிவு, புற்றுநோய் மற்றும் கொழுப்பு கல்லீரல் போன்ற தீவிர நோய்களில் இருத்து தற்காத்துக் கொள்ள தரமான காபி குடிப்பது நன்மை பயக்கும் என்று சில ஆராய்ச்சிகள் கூட கூறியுள்ளன. காபி குடிப்பதில் அதிக நன்மை இருக்கிறது என்பதற்காக அளவுக்கதிகமாக குடிக்கக்கூடாது.

நிபுணர்களின் கூற்றுப்படி, சூடான காபியில் கஃபெஸ்டால் மற்றும் கஹ்வோல் எனப்படும் இயற்கை எண்ணெய்கள் உள்ளன. அவை உடலில் கொலஸ்ட்ரால் உருவாவதைக் குறைக்கின்றன. தற்போதைய காலகட்டத்தில் வடிகட்டிய காபி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த காபியை குடிப்பதற்கு என்று சில அளவுகள் உள்ளன.

1 முதல் 3 கப் காஃபி

ஒரு கப் காஃபியில் 100 மில்லிகிராம் காஃபின் உள்ளது. இது உடலின் குடல் இயக்கத்திற்கு உதவுகிறது. இதனால் சோர்வு நீங்கும். அதே நேரத்தில், 2 கப் காபி குடிப்பது மக்களின் உடற்பயிற்சி செயல்திறனை பெரிதும் மேம்படுத்துகிறது மற்றும் இதய நோய்களின் அபாயத்தை குறைக்கிறது. இது தவிர, 3 கப் காபி குடிப்பதால், இருதய நோய் அபாயம் 12 சதவீதம் குறைகிறது.

தினமும் 4 கப் காபி குடிப்பதால், மது அல்லாத நோயின் அபாயத்தை 19 சதவீதம் குறைக்கிறது. அதே நேரத்தில், 5 கப் காபி உட்கொள்வது வகை 2 நீரிழிவு நோயின் அபாயத்தை சுமார் 29 சதவீதம் குறைக்கிறது.

அதிகமாக வேண்டாம்

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சுதானே. அப்படி காஃபியை அதிகமாக உட்கொண்டால், தூக்கமின்மை, அமைதியின்மை, வயிற்றுக் கோளாறு, வாந்தி, நரம்புத் தளர்ச்சி, தலைவலி, இதயத் துடிப்பு அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

மேலும் படிக்க...

பிளாஸ்டிக் கவரில் ஊற்றிக் கொடுக்கும் சூடான உணவை சாப்பிடலாமா?

பழங்களின் தோல்களை வீசாதீர்கள்- இத்தனை ஊட்டச்சுத்துகள் இருக்கு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)