1. வாழ்வும் நலமும்

கோடைக்கு இதமானத் தயிர் சாதம் - தினமும் சாப்பிடுவது நல்லதா?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Summer Yogurt rice- Is It Good To Eat Everyday?

கொளுத்தும் வெயில் வாட்டி வதைக்கும்போது, மனதும், வயிறும் தேடுவது தயிர் சாதத்தைத்தான். ஏனெனில் வயிற்றைக் குளு குளுவென வைத்துக்கொள்வதில், தயிருக்கு இணை தயிர் மட்டுமே. அவ்வாறு தயிர் சாதம் சாப்பிடுவது, ஜீரண சக்தி, எடையை குறைக்க என ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டிருக்கிறது. அந்த தயிர் சாதத்தை தினமும் எடுத்துக் கொண்டால் உடலில் பல ஆரோக்கிய மாற்றங்கள் உண்டாகும் .

அதனால்தான் மக்கள் விரும்பி சாப்பிடும் உணவுகளில் தயிர் சாதம் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. அதிலும் குறிப்பாக சாம்பார், கூட்டு, ரசம் என சாப்பிட்டுவிட்டு இறுதியாக தயிர் சாதம் சாப்பிடுவார்கள் தென்னிந்தியாவைச் சேர்ந்த மக்கள். இதிலுள்ள புரதங்கள், ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் மற்றும் நார்ச்சத்துக்கள் ஒட்டு மொத்த உடலுக்கும் நன்மைகளைத் தருகிறது.

எடையை குறைக்க (weight loss)

தயிர் சாதம் சாப்பிட்டதும் ஓரளவுக்கு வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுக்கிறது. அதனால் ஸ்நாக்ஸ் நேரங்களில் இதை எடுத்துக் கொள்வது இன்னும் நல்லது. இது மற்ற சாத வகைகளைக் காட்டிலும் கலோரி அளவு மிகக் குறைவு. அதனால் எடையைக் குறைக்க முயற்சி செய்பவர்கள் தங்களுடைய டயட்டில் தயிர் சாதத்தைக் கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

​பாக்டீரியாவை அழிக்கும்

உடலுக்கும் குடல் மற்றும் இரைப்பைக்குத் தீங்கு செய்யும் கெட்ட பாக்டீரியாக்களோடு போராடி, அவற்றை அழிக்கும் தன்மை கொண்டது.
தயிர் சாதத்தில் அதிக அளவில் இருக்கும் ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் நோய்த் தொற்றுக்களைத் தடுத்து நோய் பாதிப்பிலிருந்து மீட்கிறது.

​மன அழுத்தம் குறைய (stress relief)

அதிக மன அழுத்தத்துடன் இருக்கிறீர்கள், அதிலிருந்து விடுபட நினைத்தால், நல்ல க்ரீமியான தயிர் சாதத்தை சாப்பிடலாம். உண்மையிலேயே மன அழுத்தத்துடன் இருக்கிற சமயத்தில் தயிர் சாதம் சாப்பிடும்போது மனஅழுத்தம் குறைவதாக ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இதிலுள்ள ப்ரோ-பயோடிக் மற்றும் ஆன்டி- ஆக்சிடண்ட்டுகள் மன அழுத்தத்தைக் குறைத்து, மனதை அமைதிப்படுத்துகிறது.

​எனர்ஜி ( energy)

ஒரு கிண்ணம் தயிர் சாப்பிட்டால் அது அன்றைய நாள் முழுக்கத் தேவைப்படும் எனர்ஜியைக் கொடுக்கிறது. இதிலுள்ள கார்போஹைட்ரேட் உணவு மூலங்களை உடைத்து, ஜீரணத்தை எளிமைப்படுத்துகிறது. ஜீரண மண்டலத்தை வேகமாக செயல்பட வைப்பதற்கான முழு எனர்ஜியையும் தயிர் சாதம் உங்களுக்குக் கொடுக்கும்.

​சருமப் பாதுகாப்பு (for skin)

தயிர் சாப்பிடுவது சருமத்துக்கும் கூட நிறைய நன்மைகளைத் தரக்கூடியது. வயிறு மற்றும் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினை இருக்கும்போது அவை சருமத்திலும் பிரதிபலிக்கும். ஆனால் தயிர் சாதம் தினமும் கொஞ்சமாக எடுத்துக் கொள்ளும்போது ஜீரண சக்தி மேம்படும். இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்லாது, சருமத்துக்கும் நன்மை அளிக்கிறது.
தயிர் சாதத்தை தினமும் சிறிதளவேனும் எடுத்துக் கொண்டால், முகத்தில் எந்த மாசு மருவும் ஏற்படாமல் க்ளியர் ஸ்கின் உங்களுக்கு கிடைக்கும்.

மேலும் படிக்க...

பிளாஸ்டிக் கவரில் ஊற்றிக் கொடுக்கும் சூடான உணவை சாப்பிடலாமா?

பழங்களின் தோல்களை வீசாதீர்கள்- இத்தனை ஊட்டச்சுத்துகள் இருக்கு!

English Summary: Summer Yogurt rice- Is It Good To Eat Everyday? Published on: 10 April 2022, 12:57 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.