இந்தியாவில் கொரோனா 3-வது அலை ஆகஸ்ட்- செப்டம்பர் மாதங்களில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்படும் குழந்தைகள் 6 நாட்களில் குணம் பெறமுடியும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொடூரக் கொரோனா (Cruel corona)
உலக நாடுகளை உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் தற்போது தனது 2-அலையைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதுவரை ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ள நிலையில், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.
6 மாத பாதிப்பு (6 month exposure)
குறிப்பாகக் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அவர்களது உடல்நிலை இயல்புநிலைக்குத் திரும்ப 6 மாதங்களுக்கு மேல் ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தடுப்பூசி இல்லை (There is no vaccine)
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலை, ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் தாக்கும் எனவும், இதில், அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் பாதிக்கக்கூடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கான தடுப்பூசி இன்னும் வராததுதான் இதற்கு காரணம்.
எனினும் கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாகத் தயாராகியுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆய்வு (Study)
இந்த நிலையில் குழந்தைகளுக்கான கொரோனா பாதிப்பு தொடர்பாக ‘தி லான்செட் சைல்டு அண்ட் அடல்சன்ட்’ பத்திரிகையில் ஒரு ஆய்வு முடிவு வெளியாகி உள்ளது. இங்கிலாந்தில் ‘ஸோ கோவிட் ஸ்டடி ஸ்மார்ட் போன் செயலி’மூலம், 5-17 வயது சிறுவர், சிறுமிகள் 25 ஆயிரம் பேரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகள் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வு முடிவுகள் வருமாறு:-
கொரோனா தடுப்பூசி (Corona vaccine)
-
நீண்ட கால கொரோனா அறிகுறிகளை அனுபவிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை மிகக்குறைவு.
-
ஒரு சில குழந்தைகள் மட்டுமே, நீண்ட கால பாதிப்புகளை அனுபவிக்கின்றன என்று
சில பெரியவர்கள் நீடித்த நோய் பாதிப்பை அனுபவிக்கின்றனர். இவர்களுக்கு 4 வாரங்களோ அதற்கும் கூடுதலாகவே அறிகுறிகள் தொடரும்.
-
பொதுவாக குழந்தைகள் சராசரியாக 6 நாளில் கொரோனாவால் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இலேசான பாதிப்பு (Mild damage)
நோயின் முதல் வாரத்தில் சராசரியாக 3 அறிகுறிகள் அவர்களுக்கு இருந்தது. இலேசான பாதிப்பையே அனுபவிக்கின்றனர். இவர்கள் 6 நாளில் குணம் அடைவார்கள்.
அதிக சோர்வு (Excessive fatigue)
நீண்ட காலம் தொற்றால் பாதிக்கப்படுகிற குழந்தைகள் சோர்வு அடைகிறார்கள். 84 சதவீத குழந்தைகள், நோயின் ஒரு கட்டத்தில் சோர்வுடன் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிகுறிகள் (Symptoms)
தலைவலி, வாசனை இழப்பு ஆகியவை கொரோனாவின் பொதுவான அறிகுறிகள்.
கொரோனா வைரஸ் சோதனையில் ‘நெகட்டிவ்’ முடிவு வந்தபின்னர் கூட குழந்தைகள் சளி மற்றும் காய்ச்சலால் அவதிப்படலாம்.
இவ்வாறு அதில் தெரிய வந்துள்ளது.
மேலும் படிக்க...
மிரட்டும் ஜிகா வைரஸ்- தற்காத்துக்கொள்ள என்ன செய்யலாம்?
12 வயதிற்கு மேற்பட்டோருக்கும் வந்துவிட்டது கொரோனாத் தடுப்பூசி- ஓரிரு நாட்களில் அனுமதி!