1. வாழ்வும் நலமும்

மிரட்டும் ஜிகா வைரஸ்- தற்காத்துக்கொள்ள என்ன செய்யலாம்?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Intimidating Zika Virus - What can be done to prevent it?
Credit : CDC

மெல்ல மெல்ல கொரோனா வைரஸ் விடைபெற்றுவரும் நிலையில், அடுத்ததாக மிரட்டிக்கொண்டிருக்கிறது ஜிகா வைரஸ்.

வருகிறது அடுத்த வைரஸ் (The next virus is coming)

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை படிப்படியாகக் கட்டுக்குள் வந்துகொண்டிருக்கும் நிலையில், அடுத்ததாக ஜிகா வைரஸ் அச்சம் நாட்டு மக்களைளிடையேப் பரவிவருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, அனைத்து வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஜிகா வைரஸ் (Zika virus)

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் ஜிகா வைரஸ் (Zika Virus) பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதையடுத்துத் தமிழக- கேரள எல்லையில் தீவிர கண்காணிப்புப் பணிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும்  மேற்கொள்ளப் படுகின்றன. இந்த அனைத்து பணிகளையும் தமிழக சுகாதாரத் துறை தீவிரப்படுத்தி வருகிறது.

பிசிஆர் பரிசோதனை (PCR examination)

ஜிகா வைரஸ் சோதனைக்கான பலவித ஏற்பாடுகளையும் முடுக்கிவிட்டுள்ளன. வழக்கமான பரிசோதனையைத் தவிர பிசிஆர் பரிசோதனை மூலமாகவும் ஜிகா வைரசைக் கண்டறியத் தேவையான நடவடிக்கைகளைத் தமிழக சுகாதாரத்துறை மேற்கொண்டுள்ளது.

சென்னை


சென்னையில் (Chennai) ஜிகா வைரஸ் சோதனை மையத்தின் செயல்பாடு தொடங்கியுள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரத்துறை இயக்குனரக அலுவலகத்தில் ஜிகா வைரஸ் தொற்றை கண்டறிவதற்கான சோதனை மையத்தின் செயல்பாடு தொடங்கி விட்டது.


ஜிகா வைரஸ் இல்லை


கேரளாவின் எல்லையில் உள்ள தமிழகத்தின் 65 பகுதிகளில் இதுவரை ஏடிஎஸ் கொசுக்களின் மாதிரிகளின் சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் எந்த மாதிரியிலும் ஜிகா வைரஸ் இருப்பது பற்றி தெரியவரவில்லை என்று தமிழக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.


பரிசோதனைகள் (Experiments)

இது குறித்து கூறிய தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், எல்லைப் பகுதிகளைப் போலவே தமிழகத்தின் பிற பகுதிகளிலும் ஜிகா வைரஸ் தொற்றுக்கான சோதனைகள் மேற்கொள்ளப்படும் என கூறியிருந்தார். கேரளாவிலிருந்து ரயில் மற்றும் பேருந்துகள் மூலம் வரும் பயணிகளும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

ஜிகா வைரஸ் அறிகுறிகள் (Symptoms of Zika virus)

பொதுவாக கொசுக்களால் (Mosquito) பரவும் இந்த நோய்க்கான அறிகுறிகளில் லேசான காய்ச்சல், சொறி, வெண்படலம், தசை மற்றும் மூட்டு வலி, உடல்நலக்குறைவு அல்லது தலைவலி ஆகியவை அடங்கும்.

14 நாட்கள் வரை (Up to 14 days)

ஜிகா வைரஸ் 3–14 நாட்கள் வரை மனித உடலில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் நோய்க்கான அறிகுறிகள் பொதுவாக 2–7 நாட்கள் வரை நீடிக்கும்.

அறிகுறிகள் இல்லை (No symptoms

ஜிகா வைரஸ் தொற்று உள்ள பெரும்பாலான மக்களுக்கு அறிகுறிகள் தென்படுவது இல்லை என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.

சிகிச்சை (Treatment)

  • ஜிகா வைரஸ் தொற்றுக்கு இதுவரை எந்த குறிப்பிட்ட மருந்தோ தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படவில்லை என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

  • அறிகுறிகளுக்கு சிகிச்சையளிப்பது நல்ல பயன்களைத் தரலாம்.

  • அதிக ஓய்வு எடுப்பது அவசியம். தேவையற்ற அலைச்சலைத் தடுக்க வேண்டும்.

  • நீரிழப்பைத் தடுக்க அதிகத் திரவங்களைக் குடிக்கவும்.

    காய்ச்சல் மற்றும் வலியைக் குறைக்க தேவையான மருந்து எடுத்துக் கொள்ளவும்.

ஆஸ்பிரின் வேண்டாம் (Do not take aspirin)

பாதிக்கப்பட்டவருக்கு டெங்கு காய்ச்சல் இல்லை என்பது உறுதிபடுத்தப்படும் வரை, ஆஸ்பிரின் மற்றும் பிற ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளை (NSAIDS) எடுத்துக் கொள்ள வேண்டாம்.

மேலும் படிக்க...

காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

27 மாவட்டங்களில் திங்கட்கிழமை முதல் மாவட்டத்திற்குள் - மாவட்டங்களுக்கிடையே பேருந்து போக்குவரத்து

English Summary: Intimidating Zika Virus - What can be done to prevent it? Published on: 13 July 2021, 10:21 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.