இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 12 May, 2021 9:39 AM IST
Credit : Webmd

தமிழகம் முழுவதும் அடுத்த 2 வாரங்களில் கொரோனாத் தொற்றின் அளவு உச்சத்தைத் தொடும் என அமெரிக்காவின் சுகாதார மதிப்பீடு ஆய்வு நிறுவனமான ஐ.எச்.எம்.இ. எச்சரித்துள்ளது. மேலும் தினமும் இறப்பு எண்ணிக்கை 850 ஆக அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

கொரோனா 2-வது அலை (Corona 2nd wave)

இந்தியாவில் கொரோனாத் தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது. பல மாநிலங்களில் ஒற்றை நாள் தொற்றின் அளவு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது.

இதேபோல், தமிழகத்திலும் தொற்றின் பாதிப்பு அதிகரித்துக்கொண்டு செல்கிறது. பரவலைக் கட்டுப்படுத்த அரசுப் போர்க்கால நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ள போதிலும், பரவல் கட்டுப்படுத்தப்பட வில்லை. தினமும் தொற்றின் அளவு உயர்ந்துகொண்டே உள்ளது. உயிரிழப்போர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

எச்சரிக்கை (Warning)

இந்த நிலையில், அடுத்த 2 வாரங்களில் தொற்றின் அளவு உச்சத்தைத் தொடும் என அமெரிக்காவின் (America) சுகாதார மதிப்பீடு ஆய்வு நிறுவனமான ஐ.எச்.எம்.இ. எச்சரித்துள்ளது.

பலி உயரும் (Kills will rise)

கொடூரக் கொரோனாவிற்கு பலியாவோரின் எண்ணிக்கையும் 850 ஆக அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், தொற்று பரவலைத் தடுப்பதற்கான வழிகளையும் இந்த ஆய்வு நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.

பரவலைத் தடுக்கும் யுக்தி (Strategy to prevent spread)

முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது ஆகிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தொற்று பரவல் வேகத்தை கட்டுப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 அடி வரை (Up to 6 feet)

இதனிடையே கொரோனாப் பாதிப்பிற்கு ஆளான நபர்களிடம் இருந்து 6 அடி வரை நோய்த்தொற்று அபாயம் இருப்பதுத் தெரியவந்துள்ளது.அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் புதிய வழிகாட்டுதல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

காற்றின் மூலம் பரவும் (Spread through the air)

அதில், காற்றின் மூலம் குறிப்பிட்ட தூரத்திற்கு கோவிட்-19 வைரஸ் பரவும். இதனை சுவாசிக்கும் அனைவருக்கும் நோய்த்தொற்று பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இனி பாதிப்பிற்கு ஆளான நபர்களிடம் இருந்து 6 அடி தூரத்தில் இருந்தால் கூட காற்றின் மூலம் கொரோனா வைரஸ் பரவும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்குக் காற்றோட்டம் குறைந்த அல்லது அதிக கூட்டம் நிறைந்த உள்ளரங்கங்களில் நடைபெறும் நிகழ்வுகள் முக்கிய காரணமாகும்.

ஒரு மீட்டர் தூரம் வரை (Up to a distance of one meter)

ஏனெனில் போதிய அளவில் காற்றோட்டம் இல்லாத காரணத்தால் வைரஸ் கிருமிகள் காற்றிலேயே நீண்ட நேரம் நிலைத்திருக்கும். இதன்மூலம் காற்றில் ஒரு மீட்டர் தூரம் வரை கூட பயணிக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

தடுப்பூசியும் செயல் இழக்கலாம்! எச்சரிக்கிறது உலக சுகாதார நிறுவனம்!

கொரோனா சிகிச்சைக்கு உதவுகிறது பசுவின் பால்!

தடுப்பூசி செலுத்தும் வேகம் குறைந்தால் அடுத்தடுத்த அலைக்கு வாய்ப்பு: பிட்ச் எச்சரிக்கை!

English Summary: Corona infection to reach peak in Tamil Nadu in next 2 weeks - US warns!
Published on: 12 May 2021, 09:31 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now