1. வாழ்வும் நலமும்

CoWIN portal-லில் புதிய 4 இலக்க பாதுகாப்பு குறியீடு அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது; விவரங்களை தெறிந்து கொள்ளுங்கள்.

Sarita Shekar
Sarita Shekar
CoWiN

பல பயனர்களிடமிருந்து வரும் புகார்கள் மற்றும் தரவு பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண கோவின் போர்ட்டலில் புதிய 4 இலக்க பாதுகாப்பு குறியீடு அம்சத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

கொரோனா  தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன் பதிவு செய்ய அரசு அறுமுகப்படுத்தியுள்ள போர்டல் மற்றும் செயலி தான் CoWIN ஆகும். 

பல பயனர்களிடமிருந்து வரும் புகார்கள் மற்றும் தரவு பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசு கோவின் போர்ட்டலில் புதிய 4 இலக்க பாதுகாப்பு குறியீடு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய பாதுகாப்பு அம்சம் தடுப்பூசி தரவுகளில் உள்ள பிழைகளை வெகுவாக குறைக்கும் என்று கூறப்படுகிறது. "மே 8 முதல் "கோவின் போர்டலில்”  நான்கு இலக்க பாதுகாப்பு குறியீட்டின் புதிய அம்சத்தை அரசு அறிமுகப்படுத்துகிறது, இது தடுப்பூசி நிலை குறித்த தரவு உள்ளீட்டு பிழைகளை குறைக்கும் மேலும் பொது மக்களுக்கு பிரச்சனைகளை குறைக்கும்" என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தடுப்பூசி பதிவு செய்த நபருக்கு தடுப்பூசி போடாமலேயே, தடுப்பூசி போடப்பட்டதாக தகவல் அனுப்பப்பட்டது போன்ற பிழைகள் கவனத்தில் கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து , இந்த பாதுகாப்பு அம்சம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது. 

புதிய நான்கு இலக்க பாதுகாப்பு குறியீடு எவ்வாறு செயல்படும் ?

-இந்த புதிய அம்சம் தடுப்பூசி  போடுவதற்கு ஆன்லைன் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

-இந்த புதிய அம்சம் தடுப்பூசிக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.- நான்கு இலக்க பாதுகாப்புக் குறியீடு ஒப்புதல் சீட்டில் அச்சிடப்படும். 

- நான்கு இலக்க பாதுகாப்புக் குறியீடு ஒப்புதல் சீட்டில் அச்சிடப்படும். 

- தடுப்பூசி பெற முன்பதிவு செய்த பின்னர் பயனாளிக்கு அனுப்பப்படும் எஸ்எம்எஸ்ஸில், இந்த  4 இலக்க குறியீடு எண் இருக்கும்.

- இதை தடுப்பூசி பெற போகும் போது, காண்பிக்க வேண்டும்

- ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்களின் தடுப்பூசி நிலை குறித்த தரவு உள்ளீடுகள் சரியாக பதிவு செய்யப்படுவதை இது உறுதி செய்யும்.

-இதனால், பிழைகள் பெருமளவு குறையும்

தடுப்பூசி மையத்திற்கு நீங்கள் கொண்டு செல்ல வேண்டிய அனைத்து ஆவணங்களும் என்ன?

- தடுப்பூசி போடச் செல்லும் போது, பதிவு செய்யப்பட்ட மொபைல் தொலைபேசியில் கிடைத்த உறுதிப்படுத்தும் எஸ்எம்எஸ் தகவலை எடுத்துச் காண்பிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியது.

- பாதுகாப்பு குறியீட்டைக் கொண்டு தடுப்பூசி தொடர்பான பதிவு புதுப்பிக்கப்பட்ட பின்னரே டிஜிட்டல் சான்றிதழ் உருவாக்கப்படும் என்பதால் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பாதுகாப்பு குறியீட்டை வழங்க வேண்டும்.

- தடுப்பூசி போடப்பட்டது அதை உறுதிபடுத்தும் எஸ்எம்எஸ் உங்கள் மொபைலுக்கு அனுப்பப்படும்.

தடுப்பூசி செயல்முறை வெற்றிகரமாக முடிக்கப்பட்டு டிஜிட்டல் சான்றிதழ்  கிடைத்துள்ளது என்பதை இந்த  எஸ்எம்எஸ் குறிக்கிறது.

எஸ்எம்எஸ் வரவில்லை என்றால், தடுப்பூசி மையத்தின் பொறுப்பாளருடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க..

Covid19 - 2nd Wave : மீண்டும் வேகமாக பரவி வரும் கொரோனா அலை! மாறிய கொரோனாவின் அறிகுறிகள் தெரியுமா?

கொரோனா தொற்று மிக மோசமான அழிவை ஏற்படுத்தும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

7.3 கோடிக்கும் அதிகமானோருக்கு Covid தடுப்பூசி!

English Summary: Introducing the new 4-digit security code feature in the CoWIN portal; Details inside Published on: 08 May 2021, 03:57 IST

Like this article?

Hey! I am Sarita Shekar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.