டெல்டா வகைக் கோவிட் வைரஸ், அம்மை நோய் போல் எளிதில் பரவும் ஆபத்து இருப்பதாக அமெரிக்க ஆய்வில் அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது.
கொடூரக் கொரோனா (Cruel corona)
உலக நாடுகளை அச்சுறுத்திய கொடூரக் கொரோனா இந்தியாவின் பல மாநிலங்களிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி, ஆயிரக்கணக்கானோரின் உயிரைக் காவு வாங்கியது.
கோரத்தாண்டவம்
இந்தக் கொரோனாவின் 2 -வது அலை சற்றே ஓய்ந்துள்ள நிலையில், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் டெல்வா வகை கோவிட் வைரஸ் தன் கோரத் தாண்டவத்தை ஆடத்தொடங்கியுள்ளது.
100 நாடுகள் (100 countries)
இதனிடையே இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வகை கோவிட் வைரஸ், உலகின் 100 நாடுகளுக்கு மேல் பரவிவிட்டது. எதிர்காலத்தில் இது இன்னும் தீவிரமாகத் தாக்கும் வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே எச்சரித்துள்ளது.
அமெரிக்கா ஆய்வு (USA Study)
இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள சி.டி.சி., என்னும் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
வேகமாகப் பரவும் (Spread fast)
டெல்டா வகை கோவிட் வைரஸ் மெர்ஸ், சார்ஸ், எபோலா, ஜலதோஷம், பருவ காய்ச்சல், சிற்றம்மை, பெரியம்மை போல வேகமாகப் பரவுகிற வைரஸ். இது பெரியம்மை போல அதிவேகமாகத் தொற்றிக் கொள்ளும்.
தடுப்பூசிப் போட்டவர்களும் (And vaccinators)
எளிதாகப் பரவும். கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், தடுப்பூசி போடாதவர்கள் என்ன வேகத்தில் பரப்புவார்களோ, அதே வேகத்தில் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களும் டெல்டா வைரசைப் பரப்புவார்கள்.
அதே நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பாதுகாப்பானவர்கள். தடுப்பூசிகள் நோய்த்தொற்றின் 90 சதவீத தீவிரத்தை தடுக்கிறது. ஆனால் தொற்றைத் தடுப்பதிலும், பரப்புவதிலும் குறைவான செயல்திறனைத்தான் கொண்டுள்ளன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அம்மை போல (Like measles)
இதுகுறித்து சி.டி.சி.,யின் இயக்குநர் டாக்டர் ரோச்செல்லி வாலன்ஸ்கை கூறுகையில், 'சிற்றம்மை, பெரியம்மை போல டெல்டா வைரஸ் மிகவும் வேகமாகப் பரவும். அனைவரும் கண்டிப்பாக முகக் கவசத்தை எப்போதும் அணிந்திருக்க வேண்டும்.
மூக்கிலும், தொண்டையிலும் (In the nose and throat)
இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், தொற்று பாதிப்புக்கு உள்ளாகும் போது, தடுப்பூசி செலுத்தாமல் தொற்று பாதிப்புக்கு ஆளாகிறவர்கள் போலவே மூக்கிலும், தொண்டையிலும் அதிகளவிலான வைரசை சுமந்து செல்வார்கள். அவர்களால் பிறருக்கு எளிதாக டெல்டா வைரஸ் பரவும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
மிரட்டும் ஜிகா வைரஸ்- தற்காத்துக்கொள்ள என்ன செய்யலாம்?
12 வயதிற்கு மேற்பட்டோருக்கும் வந்துவிட்டது கொரோனாத் தடுப்பூசி- ஓரிரு நாட்களில் அனுமதி!