உலகெங்கிலும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. இதற்கு ஒரு தீர்வாக காய் ஒன்று இருக்கிறது. இதனைச் சமைத்து உண்பதன் வழி நீரிழிவு நோயிலிருந்து விடுபடலாம். இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
நீரிழிவு நோயாளிகள் உள்ளவர்கள் இந்தியாவில் அதி வேகமாக பெருகி வருவதால், இந்தியா நீரிழிவு நோய் தலைநகர் என்று அழைக்கப்படுகிறது. நீழிரிவு நோயாளிகள் தங்கள் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பல வகையான முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், வெங்காயத்தைப் போல தோற்றமளிக்கும் நூல்கோல் நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக பலனளிக்கும் காயாகும். இதில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.
வெங்காயத்தைப் போல தோற்றமளிக்கும் நூல்கோல் நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக பலனளிக்கும் காயாக இது இருக்கின்றது எனக் கூறப்படுகிறது. இதில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. வைட்டமின்கள், ஃபோலேட், நார்ச்சத்து, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் பாஸ்பரஸ் போன்றன இருக்கின்றன. அதோடு, இவை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவுகின்றன.
நூல்கோலை உட்கொள்வது எப்படி என்று பார்த்தால், நூல்கோல் சாப்பிடுவதற்கு மிகவும் பொதுவான வழி அதை கறியாக செய்து சாப்பிடுவது எனக் கூறப்படுகிறது. இது மிகவும் சுவையாக இருப்பதோடு, மிக எளிதாகவும் சமைக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதோடு, காயாக இல்லாமல் நூல்கோலை வித்தியாசமாக சாப்பிட விரும்புபவர்கள், இதை தயிருடன் சேர்த்து ராய்தாவாக உட்கொள்ளலாம். இது மிகவும் ஆரோக்கியமானதாக இருப்பதோடு இது நீரிழிவு நோயாளிகளின் ஆரோக்கியத்தையும் நன்றாக வைத்திருக்க உதவும் எனக் கூறப்படுகிறது.
குளிர்காலத்தில் சர்க்கரை நோயாளிகள் நூல்கோல் சூப் செய்து குடித்தால், குளுக்கோஸ் அளவை சீராக வைக்க அது உதவும் எனக் கூறப்படுகிறது. நூல்கோலைப் போன்றே, அதன் இலைகளும், தக்காளி, கேரட், மஞ்சள், பூண்டு, கருப்பு உப்பு மற்றும் சில மசாலாப் பொருட்களை சேர்த்து இந்த சூப்பாகச் செய்து பருகலாம்.
மேலும் படிக்க
லட்சக்கணக்கில் லாபம் தரும் செடி! இன்றே நடவு செய்யுங்க!!
Freebies: இலவச ரேஷன் போலவே இலவச டிவி சேவை! மத்திய அரசின் புதிய அறிவிப்பு!