இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 9 February, 2021 2:30 PM IST
Credit : Amazon.in

அஜினோமோட்டோ (Aginomoto) என்னும் ஒரு சுவை கூட்டும் உப்பு. இதைச் சர்க்கரை என்றும் சொல்லலாம்.

உணவுக்கு கூடுதல் சுவை கொடுக்கும் ஒரு பொருள் அஜினோமோட்டோ என்று நம் மூளையைச் சலவை செய்து வருகின்றன வர்த்தக நிறுவனங்கள். சீன வகை உணவுகளில், சுவைக்கூட்ட சேர்க்கப்படும் இந்த அஜினோமோட்டோ உண்மையில் நம் உயிரைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பறிக்கும் உப்புதான்.

கம்பெனியின் பெயர் (The name of the company)

அஜினோமோட்டோ என்பது கடலில் இருந்து சேமிக்கப்படும் உப்பு அல்ல.

இது ஒரு கம்பெனியின் பெயர், உண்மையில் இந்த உப்பின் பெயர் Monosodium glutamate (MSG ) என்பதாகும். இதனை மருத்துவ உலகில் slow killer என்கிறார்கள். ஜப்பானில், கிகுனே இகெடா என்பவரால், 1917ல் இந்த அஜினோமோட்டோ தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது.

மோனோ சோடியம் (Monosodium)

அப்போது கடல் படுகைகளில் வளரும் ஒரு பூஞ்சை மற்றும் பாசி செடி ( Seaweed ) வகைகளில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வகை உப்பு தான் monosodium ஆகும். முதலில் கிகுனே இகெடா, 1909ல் தனது வீட்டில் நடத்தி வந்த வைத்தியசாலையில் அதனை மருந்தாகப் பயன்படுத்தி வந்துள்ளார்.

பிறகு உணவுகளில் சேர்த்து அதில் ருசி கூட்டப்பட்டிருந்ததை அறிந்த பின்னர், அதனை உபயோகித்து Seasoning, cooking oil,sweetener, amino acids, வரை தயாரித்து பின் Pharmaceutical துறையிலும் இந்த உப்பை அறிமுகம் செய்தார்.

வியாபார நோக்கம் (Business Purpose)

முதலில் உயர்தரமான உப்பைத் தயாரித்த இந்நிறுவனம், பின்னர், அமெரிக்க நிறுவனத்தோடு கைகோர்த்து வியாபார நோக்கில் Glutamate என்னும் செயற்கை அமிலத்தையும் அந்த monosodium உப்போடு கலந்துவிட்டு வியாபாரத்தை திவிரப்படுத்தியது.

Glutamate என்பது ஒரு அடிமைப்படுத்தும் காரீயமாகும்..ஒருமுறை உண்டால் மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும் போதை பொருள் போன்றதொரு சுவையூக்கி ஆகும்..
முதலில் இந்த glutamateஐ உபயோகித்து Artificial Sweetener என்னும் Aspartame ஐ தயாரித்து வந்தனர். பிறகு இதன் அபாயமறிந்து அமெரிக்காவில் தடை செய்துவிட்டனர். ஆனால் அதன் மறுரூபமே இந்த அஜினோமோட்டோ உப்பாகும்.

நாடுகளே இல்லை (No Country)

இன்றைய அவசர உலக சமையல் குறிப்புகளில் தவறாமல் இடம்பெறும் இந்த அஜினோமோட்டோ உப்பை பயன்படுத்தாத நாடுகளே இல்லை எனலாம்.
சாலையோர கடைகள் தொடங்கி மல்டிகுஷன் ரெஸ்ட்டாரன்ட் வரை. சென்னை முதல் நியூயார்க் வரை என எல்லா உணவகங்களிலும் இதனை ருசிகூட்ட பயன்படுத்தாதவர்கள் இல்லை.

ரசம் வரை (Till Rasam)

முன்பெல்லாம் சைனீஸ் வகை உணவுகளில் தான் அஜினோமோட்டோ தூவப்படும் என்ற மாயை போய் தமிழகத்து ரசம் வரை தற்போது இதைத் தூவ ஆரம்பித்துவிட்டார்கள்.
சரி இதை நாம் வாங்கிப் பயன்படுத்த வேண்டாம் என நினைத்து புறக்கணித்தாலும் நாம் உபயோகிக்கும் அத்தனை வகையான பதப்படுத்தப்பட்ட உணவு பொருள்களிலும் இது மறைமுகமாகக் கலக்கப்பட்டுள்ளது.அது நாம் விரும்பியும் விரும்பாமலும் நம் நாவை அந்த சுவைக்கு அடிமைப்படுத்துகிறது.
குறிப்பாக குழந்தைகள் விரும்பி உண்ணும் பாக்கெட் சிப்ஸ், க்ரீம் பிஸ்கட், சாதாரணபிஸ்கட், நூடுல்ஸ், இன்ஸ்டன்ட் சூப், மசாலா ஐட்டங்கள், டின்னில் வரும் மீன், சிக்கன், ரெடிமேடு சப்பாத்தி, பராட்டா, சமோசா, பப்ஸ், சாஸ் வகைகள், சோயா பொருட்கள் , சாக்லேட்கள், Pizza , Maggi மற்றும் சில குளிர்பானங்கள் என அனைத்திலும் அஜினோமோட்டோ என்னும் slow killer இடம்பெற்றுள்ளது. அதனால் தான் இந்த Lays, Kurkure வகையறாக்களை உண்ணும் நம் வாண்டுகள் அதற்கு அடிமையாகிறார்கள்.

பின்விளைவுகள்(Side effects)

முடி கொட்டும்(Hair Loss)

ஆணோ பெண்ணோ இருபாலருக்கும் முடி கொட்டுவது உறுதி.

அதிக எடை (Heavy weight)

இரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகப்படுத்துவதால் அதிகமான பசி எடுக்கிறது, நாம் உணவை அடிக்கடி உண்ண உண்ண ஊளைச்சதை போடுகிறது. உடல் எடை கூடினால் தானாக சுகரும் (Diabetics) இதய நோயும் (Heart Problems) இலவசமாக வரும்.

வீரிய விஷம் (Heavy Poison)

குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு இந்த அஜினோமோட்டோ கொடிய விஷமாகும்.. ஐந்து வயது குழந்தைக்கும் தீராத தலைவலியை உருவாக்கும் தன்மை கொண்டது.

நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் (Affecting the nervous system)

நரம்பு மண்டலத்தில் அதீத உற்சாகத்தை உருவாக்கி பிறகு பயங்கரமான பலஹீனத்தை உண்டாக்கி விடும் இதனை மருத்துவர்கள் Over Stimulation of Nerves System என்கிறார்கள்.

இதய நோய் (Heart Problem)

இருதய நோய்களாக அதிபயங்கர துடிப்பும் சிலநேரம் வலியும் உருவாக்கும்.

அரிப்பு (Itching)

முகத்தில் எத்நேரமும் ஒரு எரிச்சல் இருப்பது போலவே சிலர் உணருவார்கள், அரிப்பும் தோன்றும் சிலரது முகம் கருத்திருக்கும்.

நோய்களுக்கு அடிப்படை (The basis for diseases)

வழக்கமாக இரத்த கொதிப்பு, தைராய்டு, நீரிழிவு,ஆஸ்துமா , உணவு ஒவ்வாமை , அதீத வியர்வை சுரப்பினால் உண்டாகும் Dehydration என்னும் நீர்ச்சத்து குறைதல், கண்களில் ரெட்டினா குறைபாடு எல்லாம் உருவாக அஜினோமோட்டோ காரணியாகிறது.

இவை எல்லாம் ஒரு நாள் நம்மை புற்றுநோயிடம் இழுத்துச்செல்லும்.. ஆகவே அஜினோமோட்டோவை தவிர்ப்போம். உடல் நலம் காப்போம்.

தகவல்
அக்ரி சு சந்திரசேகரன்
அருப்புக்கோட்டை
மேலும் படிக்க...

வட்டி இல்லாதக் கடன்- இந்த ஆப்-பில் உடனே கிடைக்கும்!

வறண்டு போனாலும், தண்ணீர் நின்றாலும் நிரந்தர வருமானம் தரும் கோரை சாகுபடி!

விவசாய பயிர்கள் கடன் தள்ளுபடி அரசாணை வெளியிட்டார் தமிழக முதல்வர்!

English Summary: Did you know that Ajinomoto is a Slow Killer?
Published on: 09 February 2021, 02:20 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now