பரங்கிக்காய் மூலம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் யூகிக்கமுடியாது. கொரோனா நெருக்கடியில், நீங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விரும்பினால், அதற்கு ஏற்ற காய் பரங்கிக்காய் தான். உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் பரங்கிக்காய் பெரும் உதவியாக உள்ளது.
உடல் ஆரோக்கியத்திற்கு அற்புதமான நன்மைகளைத் தரும் பரங்கிக்காய் சாப்பிடுவது மழைக்காலத்திலும் குளிர் மற்றும் இருமலில் பெரும் நிவாரணம் அளிக்கும். பரங்கிக்காயில் உள்ள வைட்டமின் ஏ, கரோட்டின் மற்றும் ஜீயாக்சாண்டின் ஆகியவை நோயை எதிர்த்துப் போராடவும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த, விரைவாக குணமாக்க உதவுகின்றன.
உணவு வல்லுநர் டாக்டர் ரஞ்சனா சிங் பரங்கிக்காயை பற்றி கூறுகையில், பரங்கிக்காயில் காணப்படும் வைட்டமின்கள் பி மற்றும் பி 6, உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்க பயனுள்ளதாக இருக்கிறது என்கிறார்.
டாக்டர் ரஞ்சனா சிங் கூறுகையில்,பரங்கிக்காயில் இரும்புச்சத்து அதிகளவில் உள்ளது. இரும்பு ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து என்பது அனைவர்க்கும் தெரியும். இரும்புச்சத்து குறைவாக இருப்பதால் இரத்த சோகைக்கு வழிவகுக்கக்கூடும். இதனால், உடல்சோர்வு, தலைசுத்துதல், தோல் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். அத்தகைய நிலையில், பரங்கிக்காய் உடலில் உள்ள இரும்புச்சத்து குறைபாட்டை பூர்த்தி செய்ய உதவுகிறது.
பரங்கிக்காயின் இன்னும் சில நன்மைகள்
பரங்கிக்காயில் வைட்டமின் ஏ அதிகளவில் காணப்படுகிறது, இது கண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பரங்கிக்காயில் ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளன, அவை உங்கள் கண்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள உதவுகின்றன.
இதுமட்டுல்லாமல், பரங்கிக்காயில் வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் இரண்டும் அதிகளவில் நிறைந்துள்ளன. அதில் உள்ள ஊட்டச்சத்துக்களின் சக்திவாய்ந்த கலவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
பரங்கிக்காயில் இருக்கும் பீட்டா கரோட்டின் வைட்டமின் ஏ ஆக மாறுகிறது. இது நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போராட உதவும் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை தூண்டுகிறது.
மேலும் படிக்க: