1. தோட்டக்கலை

பரங்கிக்காய் சாகுபடி

KJ Staff
KJ Staff

வகைகள்:
கோ 1, கோ 2, அர்க்கா, சூரியமுகி மற்றும் சந்தன்

கோ 2 (1974)

இது கோயமுத்தூர் நாட்டு இரகத்தின் தெரிவு மற்றும் சிறிய பழங்கள்

எடை 1.5 - 2.0 கிலோ.

மகசூல்

மகசூலானது 23 – 25 டன் / எக்டர் 135 நாட்களில் கிடைக்கும். குறைவான பரவுதல் மற்றும் நல்ல ஆரஞ்சு நிற சதை பகுதி.

மண்:
அங்ககத் தன்மைக் கொண்ட வடிகால் வசதியுடைய மணல் கொண்ட களிமண் ஏற்றது. கார அமிலத்தன்மை 6.5 முதல் 7.5 வரையிலுள்ள மண் ஏற்றது.

கோ 2 (1974)

இது கோயமுத்தூர் நாட்டு இரகத்தின் தெரிவு மற்றும் சிறிய பழங்கள்

எடை 1.5 - 2.0 கிலோ.

மகசூல்

மகசூலானது 23 – 25 டன் / எக்டர் 135 நாட்களில் கிடைக்கும். குறைவான பரவுதல் மற்றும் நல்ல ஆரஞ்சு நிற சதை பகுதி.

மண்:
அங்ககத் தன்மைக் கொண்ட வடிகால் வசதியுடைய மணல் கொண்ட களிமண் ஏற்றது. கார அமிலத்தன்மை 6.5 முதல் 7.5 வரையிலுள்ள மண் ஏற்றது.

பருவம்:
ஜூன், ஜூலை மற்றும் டிசம்பர், ஜனவரி ஆகியவை ஏற்ற பருவங்களாகும்

விதை அளவு

எக்டருக்கு 1.0 கிகி விதைத் தேவைப்படுகிறது.

விதை நேர்த்தி

விதைகளை இரண்டு மடங்கு அளவு தண்ணீரில் 30 நிமிடங்கள் ஊற வைத்து 6 நாட்களுக்கு மூட்டமிடல் வேண்டும்.
விதைத்தல்:
விதையை (குழிக்கு 5 விதை) விதைக்க வேண்டும் மற்றும் நடவு செய்த 15 நாட்களுக்குப் பிறகு மெல்லிய நாற்றகளை குழிக்கு இரண்டு என்ற அளவில் நடவு செய்யவும்.

இடைவெளி:
குழிகள் 30 செமீx 30 செமீx 30 செமீ என்ற அளவில் 2மீ x 2மீ இடைவெளியில் தோண்ட வேண்டும்.
உரமிடுதல்:
10 கிகி தொழுவுரம் (எக்டருக்கு 20 டன்) மற்றும் 100 கி தழை, மணி மற்றும் சாம்பல் சத்து 6:12:12 கலவையை அடியுரமாக அளிக்கவும் மற்றும் நடவு செய்த 30 நாட்களுக்குப் பிறகு நைட்ரஜனை குழிக்கு 10 கி அளிக்கவும். அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியா எக்டருக்கு 2 கிகி மற்றும் சூடோமோனஸ் எக்டக்கு 2.5 கிகி அதனுடன் 50 கிகி தொழுவுரம் மற்றும் வேப்பம் பிண்ணாக்கு 100 கிகி கடைசி உழவிற்கு முன் அளிக்க வேண்டும்

பின்செய் நேர்த்தி:

மூன்று முறை களையெடுத்தல் வேண்டும். நடவு செய்த 10 முதல் 15 நாட்களுக்குப் பிறகு எத்தரல் 250பி.பி. எம் (10 லிட்டர் தண்ணீரில் 2.5மிலி) நான்கு முறை வார இடைவெளியில் தெளிக்க வேண்டும். 
தரமான நாற்று உற்பத்தி:

நாற்றுப் பண்ணை

உயர் தொழில்நுட்ப தோட்டக்கலையில், 12 வயது ஆரோக்கியமான நிழல் வலை குடில்களில் இருந்து பெறப்பட்ட நாற்றுகளை நடவிற்கு பயன்படுத்த வேண்டும். 98 செல்களைக் கொண்ட குழித்தட்டுகளில் நாற்றுகளை வளர்க்கலாம். நன்கு மக்கிய கோகோ கரிகளை பயன்படுத்தலாம். செல் ஒன்றிற்கு ஒரு விதை விதைக்கவும். வாடிக்கையாக இரண்டு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 
உரமிடுதல்:
எக்டருக்கு 60:30:30 என்ற அளவில் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துகளை பயிர் காலம் முழுவதும் பிரித்து பயன்படுத்த வேண்டும். பாஸ்பரஸ் 75 சதவீதம் சூப்பர் பாஸ்பேட்டாக அடியுரமாக அளிக்கவும். 

பூச்சி மற்றும் நோய்கள்:                                      
வண்டுகள் மற்றும் புழுக்கள்:

பூச்சிக்கொல்லி

அளவு

டைக்லோர்வாஸ் 76% ஈ. சி

6.5 மிலி/ 10 லி

டிரைகுளோரோபோன் 50% ஈ. சி

10 மிலி/ லி

பழ ஈ:

  1. பாதிக்கப்பட்ட பழங்களை சேகரித்து அழித்துவிடவும்.
  2. வெயில் காலங்களில்  ஈக்களின் எண்ணிக்கை குறைவாகவும், மழை காலங்களில் ஈக்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கும். எனவே அதன்படி விதைப்பு நேரத்தை சரிசெய்யலாம்.
  3. பூச்சிக் கூடுகளை கண்டறிய நிலத்தை உழ வேண்டும்.
  4. மீன் உணவு பொறியை பயன்படுத்தவும். (5 கி ஈரமான மீன் உணவு + பருத்தியில் நனைக்கப்பட்ட1 மிலி டைக்லோர்வாஸ்). மொத்தமாக எக்டருக்கு 50 பொறிகள் தேவைப்படும், மீன் உணவு + பருத்தியில் நனைக்கப்பட்ட டைக்லோர்வாஸ் 20 மற்றும் 7 நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.
  5. தேவையிருப்பின் வேப்ப எண்ணெய் 3.0 சதவீதம் இலைத் தெளிப்பாக தெளிக்க வேண்டும்.

            டி.டி.டீ, லின்டேன் 1.3 சதவிகிதம் தூள், தாமிரம் மற்றும் கந்தகத் தூள்களை இடக் கூடாது. ஏனெனில் இவை தாவர விசத்தன்மை கொண்டவை.

நோய்கள்:
சாம்பல் நோய்:

சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த டைனோகேப் 1 மிலி/லி அல்லது கார்பன்டாசிம் 0.5 கி/லி தெளிக்கலாம்.
அடிச்சாம்பல் நோய்:

அடிச்சாம்பல் நோயை மேன்கோசெப் அல்லது குளோர்தலானில் 2 கி/லி தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்த முடியும். இரண்டு முறை 10 நாட்கள் இடைவெளியில் தெளிக்கலாம்.
அறுவடை:
பழங்கள் பச்சை நிறத்திலிருந்து மஞ்சள் நிறத்திற்கு மாறும்போது மற்றும் தண்டுகளில் பழங்களுக்கு பற்றின்மை குறையும்போதும் அறுவடை செய்யலாம். நன்கு முதிர்ந்த பழங்களை நடவு செய்த 85 முதல் 90 நாட்களுக்குள் அறுவடை செய்யலாம். 

மகசூல்:
எக்டருக்கு 18 முதல் 20 பழங்கள் வரை கிடைக்கும்.

சந்தை தகவல்:

பயிர் விளையும் மாவட்டங்கள்

கோயமுத்தூர், திருப்பூர்,

தமிழ்நாட்டில் முக்கிய சந்தைகள்

பெரியார் காய்கறி சந்தை, கோயம்மேடு, சென்னை, காந்தி சந்தை, ஒட்டன்சத்திரம்
நட்சிபாளையம் காய்கறி சந்தை, கோயமுத்தூர்

தர குறிப்புகள்

சுத்தமான மற்றும் பளபளப்பான தோற்றம், தோல் பச்சை நிறத்திலிருந்து மஞ்சள் நிறத்திற்கு மாறுதல், சதைப் பகுதி மஞ்சளாக இருத்தல்

English Summary: Pumpkin Cultivation Published on: 19 November 2018, 04:11 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.