தமிழர்களின் பாரம்பரிய உணவுப் பட்டியலில், இடம்பெற்றிருந்தவை, வெறும் உணவாக மட்டுமல்லாமல், ஆரோக்கியம், அழகு என இரண்டிற்கும் அடித்தளம் அமைப்பதில் முக்கியப் பங்காற்றி இருக்கின்றன.
உடல் வலிமை (Physical strength)
ஏனெனில், நம்முடைய உணவு கலாச்சாரத்தில் இடம்பெற்றுள்ள உணவுகள் விருந்தாகவும் மருந்தாகவும் நமக்கு உதவுகின்றன. இந்த வகை உணவுகளை உட்கொண்டதாலேயே நம் முன்னோர்கள் உறுதியானவர்களாவும், வலிமையானவர்களாவும் இருந்தனர். அப்படி அவர்களின் உணவில் முக்கியமானதாக இடம்பெற்றது அரிசி சாதம் வடித்தக் கஞ்சி. அரிசி சாதத்தில் ஊட்டச்சத்து மிகுந்து காணப்படுகிறது.
பழையது
முந்தைய இரவில் வடிக்கப்பட்ட சாதத்தை வடிகஞ்சி மற்றும் தண்ணீர் ஊற்றி பழைய சாதமாக மாற்றி, மறுநாள் காலையில் சிறிதளவு மோர் அல்லது தண்ணீர் ஊற்றி சாப்பிட்டால், அதற்கு இணையாக எந்த உணவும் வராது.
நமது உடல் நலத்தை வலுப்படுத்தும் எண்ணற்ற மூலக்கூறுகளை வடிகஞ்சி உள்ளடக்கிக் கொண்டுள்ளது.
உடல் குளிர்ச்சி (Body cooling)
இந்த அற்புதமான அரிசிக் கஞ்சியை தலையில் தேய்த்து வந்தால் தலைமுடி மிருதுவாகவும், பளபளப்பாகவும் மின்னும். குளித்து முடித்தவுடன் கஞ்சியை தலைமுடியில் தடவி அரை மணி நேரம் கழித்துக் கழுவ வேண்டும். தலையைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவும் இது உதவும்.
ஜீரண சக்தி (Digestive power)
வடிகஞ்சியுடன் ஒரு டம்ளர் மோர் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சியாகும். இவற்றுடன் சிறிதளவு புதினா, சீரகத்தூள் கலந்து குடித்தால் ஜீரண சக்தி அதிகம் கிடைக்கும்.
வலி நிவாரணி (Pain reliever)
வடிகஞ்சியுடன் சிறிதளவு வெந்நீர், கல் உப்பு கலந்து மிதமான சூட்டில் கால்களை முக்கி எடுத்ததால் கால் வீக்கம் குறையும். வலியும் வந்த வழி தெரியாமல் காணாமல் போகும்.
பசியைத் தூண்டும்
பசி எடுக்கமால் அவதியுறும் மக்கள் கஞ்சியுடன் சிறிது சீரகம் கலந்து குடித்தால் பசி நன்றாக தூண்டும். சாப்பிட்ட உணவும் நன்கு செரிமானமாகும்.
சரும பராமரிப்பு (Skin care)
வடிகஞ்சியை திராட்சையுடன் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகத்தில் படிந்திருக்கும் இறந்த செல்கள் நீங்கி முகம் மிளிரும்.
சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்களை குணப்படுத்துவதிலும் கஞ்சி இன்றியமையா இடம் பிடிக்கிறது. காட்டன் துணியில் கஞ்சியை நனைத்து சிரங்கு உள்ள இடங்களில் கட்டி வந்தால் புண்ணின் ரணம் ஆறும்.
வயிறு வலி (stomach pain)
வயிற்று வலியால் அவதிப்படுபவர்கள் வடித்த கஞ்சியுடன் வெந்தயத்தூள், பனங்கற்கண்டு சேர்த்து பருகினால் வயிறு வலி விரைவில் குணமாகும்.
வேர்க்குரு (Root)
வேர்க்குரு தென்படும் இடத்தில் கஞ்சியைத் தடவி வந்தால் வேர்க்குரு பிரச்சினை தீரும்.
இளமை
தோல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் அரிசிக் கஞ்சியை நெற்றி, கழுத்து, கை, முகம் போன்ற இடங்களில் தேய்த்து வருவதன் மூலம் வயதான தோற்றத்தை தவிர்த்து, இளமையைத் தக்கவைத்துக்கொள்ள முடியும்.
மேலும் படிக்க...
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் வேம்பு தேநீர்!
சருமப் பிரச்சனை தீர Milk water bathபாத் தான் பெஸ்ட்- விபரம் உள்ளே!