1. வாழ்வும் நலமும்

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் வேம்பு தேநீர்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Neem tea to control diabetes!
Credit : Samayam Tamil

நமது சொத்தை இழந்தால் எதையும் இழந்துவிடவில்லை, ஆனால் உடல் நலத்தை இழந்தால், அனைத்தையும் இழந்துவிட்டதாகப் பொருள் என ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.

வயது வித்தியாசம் (Age difference)

அது உண்மைதான். ஆனால் உடல் நலத்தைத் தக்கவைத்துக்கொள்வது என்பது இன்றைய சூழ்கிலையில் அனைவருக்கும் சவால் மிகுந்ததாகவே உள்ளது.
அந்த வகையில், சிறியவர் முதல் பெரியவர் என வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் பாதிக்கும் நோய் நீரிழிவு நோய்.

வரும்முன் காப்போம் (Prevention is better than cure)

இந்தச் சர்க்கரை நோயினால் பலரும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். பல்வேறு விதமான மருந்துகளை உபயோகித்தாலும் நீரிழிவு நோய் முற்றிலுமாக ஒழிந்து போவதில்லை.

வரும் முன் காப்பது நன்று என்பதால், சர்க்கரை நோயை வராமல் தடுக்க வீட்டிலேயே எளிய முறையில் சுலபமாக நீரிழிவு நம்மைத்  தாக்காமல் பாதுகாத்துக் கொள்ளலாம். அதில் ஒரு வழி வேம்பு தேநீர்.  தயாரிப்பதும் சுலபம்.

தேவையான பொருட்கள்

வேப்பிலையை காய வைத்து தூளாக்கி வைத்துக் கொண்டால் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

வேப்பிலை தூள்                  -1 தேக்கரண்டி
தண்ணீர்                             - 1 - 1/2 கப்
இலவங்கப்பட்டை தூள்        - 1/2 தேக்கரண்டி
டீ தூள்                                 - 1 தேக்கரண்டி

செய்முறை (Recipe)

  • முதலில் வேப்பிலையைத் தூளாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

  • பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் வேப்பிலைத் தூள் மற்றும் லவங்கப்பட்டைத் தூளை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

  • அதேபோல், தண்ணீரில் தேயிலையைச் சேர்த்துக் கொதிக்க வைத்துத் தனியாக  வடிகட்டிக் கொள்ளவும்.

வேம்பு தேநீர் (Neem tea)

இந்த இரண்டு பானங்களையும் ஒன்றாக கலந்து குடித்து வரவும். இந்த தேநீரை தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

சர்க்கரை நோயில்லாதவர்கள் இந்த தேநீரை குடித்து வந்தால், அவர்களை நெருங்க நீரிழிவும் தயங்கும்.

மேலும் படிக்க...

இயர்போன் பயன்படுத்துவதால் இத்தனைப் பிரச்னைகள் வருமா!

சருமப் பிரச்சனை தீர Milk water bathபாத் தான் பெஸ்ட்- விபரம் உள்ளே!

English Summary: Neem tea to control diabetes!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2022 Krishi Jagran Media Group. All Rights Reserved.