கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் மற்றும் இப்யூபுரூஃபன் போன்ற வலி நிவாரணிகளை எடுத்துக் கொண்ட தாய்மார்களில், 37 வாரங்களுக்கு முன் குறைப்பிரசவம் ஏற்படுவதற்கான வாய்ப்பு 50 சதவீதம் அதிகமாக இருக்கிறது.
தாய்வழி வலிநிவாரணி மருந்துகளின் பயன்படுத்தினால் உடல்நலப் பிரச்சினைகளுடன் குழந்தை பிறக்கும் அபாயத்தை அதிகரிக்க ஒன்றரை மடங்கு அதிக இருக்கிறது. கர்ப்ப காலத்தில் வலி நிவாரணி மருந்துகளைப் பயன்படுத்துவது பற்றிய மருத்துவ ஆலோசனையை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள அபெர்டீன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 30 ஆண்டுகளில் 151,000 க்கும் மேற்பட்ட கர்ப்பங்களின் தரவை ஆய்வு செய்தனர். ஐந்து பொதுவான வலிநிவாரணிகளான, பாராசிட்டமால், ஆஸ்பிரின் மற்றும் ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் (NSAIDகள்), டிக்ளோஃபெனாக், நாப்ராக்ஸன் மற்றும் இப்யூபுரூஃபன் ஆகியவற்றின் பரிந்துரைக்கப்படாத தாய்வழி நுகர்வுக்கான மருத்துவ குறிப்புகளைக் குழு ஆய்வு செய்தது.
கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் மற்றும் இப்யூபுரூஃபன் போன்ற வலி நிவாரணிகளை எடுத்துக் கொண்ட தாய்மார்களில், பிரசவக் காலத்திற்கு முன் குறைப்பிரசவம் ஏற்படுவதற்கான வாய்ப்பு 50 சதவீதம் அதிகமாக இருக்கிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
வலி நிவாரணிகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகளாக, நரம்புக் குழாய் குறைபாடுகள், புதிதாகப் பிறந்த குழந்தை பிரிவில், புதிதாகப் பிறந்த குழந்தை இறப்பு, பிறப்பு எடை 2.5 கிலோவிற்கும் குறைவு ஆகியவற்றை BMJ ஓபனில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
"என்எஸ்ஏஐடிகளுடன் இணைந்த பாராசிட்டமால் மருந்துகள் அதிக ஆபத்துடன் தொடர்புடையது என்பதை வலுப்படுத்த வேண்டும். மேலும் கர்ப்பிணிப் பெண்கள் எப்பொழுதும் மருந்துகளை எடுத்துக்கொள்வதற்கு முன்பு தங்கள் மருத்துவரை அணுக வேண்டும். கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிகாரப்பூர்வ ஆலோசனையைக் கட்டாயமாக வலுப்படுத்த ஊக்குவிக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.
உலகளவில் 30 சதவிகிதம் முதல் 80 சதவிகிதம் பெண்கள் கர்ப்ப காலத்தில் பரிந்துரைக்கப்படாத வலி நிவாரணிகளைப் பயன்படுத்துகின்றனர். இது பொதுவான கர்ப்பக்காலத்தில் நோய் அறிகுறிகளான காய்ச்சல், காய்ச்சல், அழற்சி அல்லது வாத நோய் நிலைமைகளை ஏற்படுத்தும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
இருப்பினும், கர்ப்ப காலத்தில் ம்ருந்து பயன்பாட்டின் பாதுகாப்பு பற்றிய தற்போதைய நிலைகள் பரவலாக வேறுபடுகின்றன. சில மருந்துகள் பாதுகாப்பானதாகக் கருதப்படுகின்றன. மற்றவை இல்லை. எனவே ஒட்டுமொத்தமாக, பத்தில் மூன்று பெண்கள் கர்ப்ப காலத்தில் வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக் கொள்கின்றனர். இது 30 வருட ஆய்வுக் காலத்தின் கடந்த ஏழு ஆண்டுகளில் 60 சதவீதமாக அதாவது, இருமடங்காக அதிகரித்துள்ளது. இக்கணக்கெடுப்பு என்பது இரு மருந்துகளையும் இணைத்து எடுத்துக் கொள்ளும் பயன்பாடு வேகமாக வளர்ந்து வருவதை குறிக்கிறது.
"ஆய்வு கண்டுபிடிப்புகளின் வெளிச்சத்தில், பரிந்துரைக்கப்படாத வலி நிவாரணிகளை அணுகுவது, தவறான தகவல் மற்றும் இணையம் மூலம் சரியான தகவல்களுடன் இணைந்து, பாதுகாப்புக் குறித்தக் கவலைகளை எழுப்புகிறது" என்று ஜாஃபீரி கூறுகிறார். எனவே, கர்ப்பக் காலங்களில் மருத்துவரின் ஆலோசனை இன்றி வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்ள வேண்டாம் என அறுவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் படிக்க
பெண்களைக் குறி வைக்கும் மார்பகப் புற்றுநோய்! தீர்வுகள் என்ன?