கொரோனா 3-வது அலை தொடர்பாக சமூக ஊடகங்களில் வரும் தகவல்களை, பொது மக்கள் நம்ப வேண்டாம் என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
கொலைகாரக் கொரோனா (The killer corona)
கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் மூலை முடுக்கெல்லாம் பரவி, வயது வித்தியாசம் இன்றி, குறைவான நோய் எதிர்ப்பு சக்திக் கொண்டிருந்தவர்களையெல்லாம் கொன்றுக் குவித்தது.
கட்டுக்குள் வந்தது (Came under control)
இதனால் மக்கள் அச்சமடைந்த நிலையில், இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு, 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி என அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு, தொற்றுப்பரவலைக் கட்டுக்குள் கொண்டுவந்தது.
இந்நிலையில், சென்னை, சின்னமலை, புனித பிரான்சிஸ் சேவியர் பள்ளியில், தடுப்பூசி முகாம், நேற்று துவங்கியது. இதை, அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.பின், அமைச்சர் கூறியதாவது:
சிறப்பு முகாம் (Special camp)
தனியார் நிறுவனங்கள், வியாபாரிகள், கர்ப்பிணியர் என, அனைவருக்கும் தடுப்பூசி போட, சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. அடுத்த கட்டமாக, ஆன்மிகம், சுற்றுலா தலங்களில் சிறப்பு கவனம் செலுத்தி, தடுப்பூசி போடப்படும்.
ஆன்மீக தலங்கள் (Spiritual sites)
திருவண்ணாமலை, ராமேஸ்வரம், நாகூர், வேளாங்கண்ணி போன்ற ஆன்மிக தலங்கள் அமைந்துள்ள பகுதியில், தடுப்பூசி போட, அங்குள்ள மாவட்ட ஆட்சியர்களிடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
உண்மை இல்லை (Not true)
மத்திய அரசு, தமிழகத்திற்கு 1.80 கோடி தடுப்பூசிகள் வழங்கி உள்ளது. இதில், 4.76 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., இரண்டு நாட்களுக்கு முன், 30 லட்சம் தடுப்பூசி வந்ததாகவும், அதை பயன்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும், உண்மைக்குப் புறம்பானச் செய்தியை தெரிவித்துள்ளார்.
இரு தினங்களுக்கு முன், 3 லட்சம் தடுப்பூசிகள் தான் வந்தன. ஜூன் மாதம், ஐந்து லட்சம் தடுப்பூசிகளை வீணடித்ததாக, பா.ஜ.,வை சேர்ந்த நடிகை குஷ்பு, கூறியதில் உண்மை இல்லை.
3 லட்சம் தடுப்பூசிகள் வீண் (3 lakh vaccines is waste)
அ.தி.மு.க., ஆட்சியில், மூன்று லட்சம் தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டு உள்ளன.
மருத்துவர்கள், செவிலியர்களுக்கு வழங்கிய முறையான பயிற்சியில், இரண்டு மாதத்தில், ஏழு லட்சம் தடுப்பூசிகள் சேமிக்கப்பட்டு உள்ளன.
டெல்டா பிளஸ் இல்லை (No Delta Plus)
காஞ்சிபுரம் மாவட்டம், கரியாம்பட்டி கிராம குழந்தைகள் காப்பகத்தில், கொரோனா பாதித்த, 43 குழந்தைகளுக்கு, டெல்டா பிளஸ் பரிசோதனை செய்யப்பட்டதில், இல்லை என முடிவுகள் வந்தன.
எதிர்கொள்ளத் தயார் (Ready to face)
கொரோனா, 3வது அலையைக் கையாள, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், குழந்தைகளுக்கான சிகிச்சை மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
தற்போது, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, ஆக்சிஜன் படுக்கை வசதிகள் உள்ளதால், பொது மக்கள் அச்சப்படத் தேவையில்லை.
நம்ப வேண்டாம் (Do not believe
மூன்றாவது அலை தொடர்பாக, சமூக வலைதளங்களில் வரும் தகவல்களைப் பொது மக்கள் நம்ப வேண்டாம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் படிக்க...
ஆகஸ்ட்டில் கொரோனா 3-வது அலை: அடுத்த 100 நாட்கள் அபாயகரமானது!
மிரட்டும் ஜிகா வைரஸ்- தற்காத்துக்கொள்ள என்ன செய்யலாம்?