Health & Lifestyle

Friday, 15 April 2022 06:38 AM , by: R. Balakrishnan

Do this to make dry hands smooth

இளம் தலைமுறையினர் சிலருக்கு வறண்ட கைகள் பிரச்சினையாக இருக்க கூடும். அதை எண்ணி கவலைப்பட்டு மனம் வருந்துவர். ஆனால், இனி நீங்கள் மனம் வருந்த வேண்டாம்‌. வறண்ட கைகளை மிருதுவாக மாற்ற சில வழிமுறைகளை காண்போம் வாருங்கள்.

வறண்ட கைகள் (Dry Hands)

  • ஆலிவ் எண்ணெயை லேசாக சூடாக்கி, அதில் விட்டமின் ‘இ’ ஆயிலை கலந்து அந்தக் கலவையை கைகளில் பூசி 10 நிமிடம் கழித்து மசாஜ் செய்து பின் துடைத்திட கைகள் மிருதுவாகும்.
  • சமையல் செய்யும்போது காட்டன் கிளவுஸ் அணிந்துகொண்டால், கைகள் வறண்டு சொர சொரப்பாகாமல் இருக்கும்.
  • கெமிக்கல் அதிகம் கொண்ட சோப், பவுடரை உபயோகிக்காமல் இருக்க, கைகள் சாஃப்ட்டாக இருக்கும். பாத்திரம் கழுவும் போது கைகளில் கிளவுஸ் அணிந்து கொள்ளலாம்.
  • கருப்பான கை மூட்டுகளின் மீது எலுமிச்சை சாற்றில் சர்க்கரை கலந்து மென்மையாக தேய்த்து பின் கழுவி வர கருமை மாறும்.
  • பாத்திரம் அல்லது துணிகளை கைகளால் துவைத்த பிறகு தேங்காய் எண்ணெயையோ அல்லது மாய்சரைசிங் கிரீமை தடவினால், கைகள் சொரசொரப்பாகாது

மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றினாலே போதும். கைகள் எப்போதும் வறண்டு போகாது. மிருதுவாக தனித்தன்மையுடன் இருக்கும்.

மேலும் படிக்க

நோய் பல தீர்க்கும் அத்தி மரத்தின் சிறப்பான பயன்கள்!

கவனம் தேவை: தலையணை இல்லாமல் தூங்கினால் நலமே!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)