1. வாழ்வும் நலமும்

கவனம் தேவை: தலையணை இல்லாமல் தூங்கினால் நலமே!

R. Balakrishnan
R. Balakrishnan
Sleeping without a pillow is good

தலையணை இல்லாமல் தூங்குபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஏனென்றால் இங்கு தலையணை வைத்து தூங்குவதை நம் மரபாகவே நாம் பயன்படுத்தி வருகிறோம். இன்னும் சிலர் தலைக்கே இரண்டு தலையணை வைத்து தூங்கும் பழக்கத்தை வைத்திருப்பார்கள்.

இன்னும் சிலர் காலுக்கு ஒரு தலையணை, பக்கத்தில் கட்டிப்பிடித்து படுக்க தலையணை என வித, விதமாக தூங்குவதற்கு தலையணை வைத்திருப்பார்கள். இப்படியான தலையணையே இல்லாமல் தூங்குவதில் நமக்கு எவ்வளவு ஆரோக்கியம் கிடைக்கும் என தெரிந்து கொள்ளுங்கள்.

தலையணை இல்லாமல் தூங்குபவர்களுக்கு தண்டுவடம் அதன் இயல்பான நிலையில் இலகுவாக இருக்குமாம். இதனால் உடல்வலி, தண்டுவட பிரச்னை துளிகூட ஏற்படாதாம்.

தலையனை வேண்டாம் (No need pillow)

உயரமான தலையணை பயன்படுத்தும் போது படுக்கை நிலை குலைந்துபோகும். இதனால், தண்டுவடம் பாதிக்கும். தலையணை இல்லாமல் தூங்கினால் தோள்பட்டை, கழுத்து வலியும் கூட வராது.

தலையணை இல்லாமல் தூங்கினால், உடலின் எலும்புகளை சீராக்க முடியும்.

தலையணை இல்லாமல் தூங்குபவர்களுக்கு முகச்சுருக்கம் ஏற்படாது.

தலையணை இல்லாமல் தூங்கும்போது, சிலர் நேராக படுத்து தூங்குவார்கள். அவர்களுக்கு மெல்லிய தலையணையே சிறந்தது.

இது கழுத்து, தலை, தோள்பட்டை பிரச்னைகளிலிருந்து பாதுகாக்கும். சிலர் சாய்த்து அதாவது ஒருபக்கமாக படுப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.

இவர்களுக்கு அடர்த்தியான தலையணை வைத்து படுத்தால் தோள்பட்டை, காதுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்துமாம்.

குப்புறப்படுத்து தூங்குபவர்களுக்கு தட்டையான தலையணையே நல்லது. இது நம் தலையில் நிலையை அசௌரியமாக உணராமல் இருக்க உதவி செய்வதோடு, முதுகு, இடுப்பு வலியையும் விரட்டியடிக்கிறது.

ஆனால், தலையணை இல்லாது தூங்கினால் நாம் நோய்களை விரட்டி விட முடியும்.

சிலருக்கு மருத்துவர்கள் தலையணை வைத்து தூங்க பரிந்துரைத்து இருப்பார்கள். அவர்கள் மட்டும் தலையணை வைத்து தூங்கலாம் தலையணை இல்லாத தூக்கம் உடலில் நிகழ்த்தும் மாற்றம் இதுதான்.

நிஜ தலையணை மந்திரம்!

இப்படியான தலையணையே இல்லாமல் தூங்குவதில் தான் நம் ஆரோக்கியமே இருக்கிறது.

தலையணை இல்லாமல் நீங்கள் தூங்கினால் உடல் இயற்கையான நிலையில் இருக்கும். இதனால் நமது கழுத்து, முதுகு வலி ஏற்படாது. இதுமட்டுமல்ல, தலையணை இல்லாமல் தூங்கினால், மன அழுத்தமும் குறைவதால், நல்ல உறக்கம் கிடைக்கிறது.

தூக்க பிரச்னை ஏற்படும் போது முதலில் உங்கள் தலையணையில் கவனம் செலுத்துங்கள்!

மேலும் படிக்க

வாடிய செடி, மரங்களுக்கு புத்துயிர் ஊட்டும் மாமனிதர்!

பலாப்பழம் சாப்பிட்ட பிறகு, எந்த உணவுகளை நாம் உண்ணக் கூடாது?

English Summary: Attention Needed: Sleeping without a pillow is good! Published on: 13 April 2022, 06:28 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.