பொதுவாக உப்பை நாம் வெறும் சமையல் பொருளாக மட்டும் தான் பார்த்திருப்போம். ஆனால், உப்பு மனித உடலுக்கு அத்தனை நன்மைகளை அள்ளித் தருகிறது என்பது, இங்கு எத்தனை பேருக்குத் தெரியும். ஆம், உப்பு உடல் நலத்திற்கு மட்டுமின்றி, சருமப் பாதுகாப்பிற்கும் உதவுகிறது. அது பற்றிய தகவல்களை இப்போது காண்போம்.
உப்பின் பயன்கள் (Benefits of Salt)
ஆதிகால மனிதர்கள், சிக்கிமுக்கி கற்களில் இருந்து நெருப்பை கண்டறிந்து, சமைத்து உண்ணத் தொடங்கிய சில காலங்களிலேயே உணவுத் தயாரிப்பில் உப்பை பயன்படுத்த தொடங்கி விட்டார்கள். உப்பில் கடல் உப்பு மற்றும் பாறை உப்பு போன்ற ஏகப்பட்ட உப்பு வகைகள் இருக்கிறது. ஆனால், தற்போதைய காலகட்டத்தில் கடலில் இருந்து பெறப்பட்டு, தொழில்நுட்ப வழியில் அயோடின் கலந்து, உருவாக்கப்படும் உப்பைத் தான் மனிதர்கள் பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள்.
உணவின் சுவையை அதிகரிப்பதையும் தாண்டி, உணவுப் பண்டங்களை கெட்டுப் போகாமல் வைத்திருக்கவும் உப்பு உதவுகிறது. மேலும், உப்பானது மனிதர்களின் உடலில் தசைகளின் இயக்கம், இதயத் துடிப்பு மற்றும் செரிமானத் திறன் ஆகியவற்றின் சீரான இயக்கத்திற்கு மிகவும் உதவி புரிகிறது. அதுமட்டுமின்றி இரத்த அழுத்த குறைப்பாடுகளைத் தடுப்பதற்கும், நீர்ச்சத்து இழப்பைத் தடுப்பதற்கும், நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுப்பதற்கும் உப்பு பெரிதும் உதவுகிறது.
சருமப் பராமரிப்பிற்கு உப்பு (Skin Care)
உணவிற்கு உப்பு எவ்வளவு முக்கியமானதோ, அதேபோல் சருமத்திற்கும் மிக முக்கியமானதாகும். உப்பு சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி, சருமப் பொலிவை அதிகரித்து காட்டுகிறது. இதற்கு ½ கப் ஆலிவ் ஆயில் மற்றும் ¼ கப் உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து, குளிப்பதற்கு முன்பாக முகம், கை, கால் மற்றும் உடலில் தடவி மென்மையாக சிறிது நேரம் ஸ்கரப் செய்த பிறகு கழுவ வேண்டும்.
உப்பு பேஸ் மாஸ்க் (Salt Face mask)
உப்பு பேஸ் மாஸ்க் போடுவதால், சருமத்தில் எண்ணெய் உற்பத்தியை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. இதற்கு 2 தேக்கரண்டி கல் உப்புடன், 4 தேக்கரண்டி தேன் கலந்து, சருமத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.
தினந்தோறும் உப்பு நீரில் குளிப்பதால், உடலில் ஏற்படும் அழற்சியை குறைத்துக் கொள்ள முடியும். மேஒஎொலும், இது வலி மிகுந்த தசை மற்றும் மூட்டுப் பகுதிகளுக்கு மிதமாகவும் இருக்கும்.
மேலும் படிக்க