1. வாழ்வும் நலமும்

பெற்றோர்களே உஷார்: குழந்தைகளிடம் அதிகரிக்கும் கொலஸ்ட்ரால்!

R. Balakrishnan
R. Balakrishnan
Cholesterol Problem in Children

கொலஸ்ட்ரால் நோயானது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, தற்போது சிறியவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இருக்கும் குழந்தைகள் செல்போன் மற்றும் டிவியை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் ஓடி ஆடி விளையாடுவதில்லை. அனைத்துமே ஒரு செல்போனில் இருக்கிறது என அதற்குள் மூழ்கி விடுகின்றனர். அதேபோல் உணவு முறைகளையும் மாற்றி விட்டார்கள். அதனால் தான் இப்போது இருக்கும் குழந்தைகள் அதிக நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

அதிக கொலஸ்ட்ரால் (High Cholesterol)

உடலில் அதிகமாக கொலஸ்ட்ரால் இருப்பது, இரத்த நாளங்களின் சுவர்களில் அடைப்பை உருவாக்க காரணமாக அமைகிறது. இதனால் இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதால், இதய ஆரோக்கியம் மோசமடைகிறது. அதிகளவு கொலஸ்ட்ரால் பிரச்சனை என்பது பரம்பரையாக கூட வர வாய்ப்புள்ளது. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை தேர்வுகளின் விளைவாகத் தான் இது அமைகிறது. ஆரோக்கிய உணவு, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் சில நேரங்களில் மருந்துகள் போன்றவை உடலில் உள்ள அதிக கொழுப்புகளை குறைக்க உதவி செய்கிறது. உடல் கொழுப்பை குறைக்க உதவும் உணவுகளை உண்ண வேண்டியது அவசியம். அதில் முக்கியமானது கொள்ளு. அடிக்கடி கொள்ளு சாப்பிட்டால், உடல் எடையானது கணிசமாக குறையும்.

இளவயதில் கொலஸ்ட்ரோல்

குழந்தைகள் உடலில் அதிகளவு கொலஸ்ட்ரால் இருப்பது எந்தவித அறிகுறிகளையும் வெளியில் காட்டாது. பெற்றோராகிய நீங்கள் குழந்தைக்கு அடிக்கடி இரத்தப் பரிசோதனை செய்து பார்த்துக் கொண்டால் தான் கொலஸ்ட்ரால் அதிகளவில் இருப்பதை அறிந்து கொள்ள முடியும்.

குழந்தைகள் தவிர்க்க வேண்டியவை

எண்ணெயில் வறுத்த மற்றும் பொறித்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

அதிகளவு இனிப்பு பானங்கள் மற்றும் சோடாக்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இனிப்பு பொருட்கள் மற்றும் கேக் போன்ற உணவுகளில் அதிக கொழுப்பு மற்றும் கலோரிகள் உள்ளதால், இவை கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து விடுகிறது.

கொலஸ்ட்ராலின் அளவை குறைக்க குழந்தைகளை தினசரி உடற்பயிற்சி செய்ய வைக்க வேண்டும். தினந்தோறும் 60 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதால், குழந்தைகளின் உடலில் இருக்கும் அதிகளவிலான கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும்.

குழந்தைகளின் வயது மற்றும் உயரத்திற்கு ஏற்ப அவர்களின் உடல் எடையானது கட்டுக்குள் இருக்கும்படி பெற்றோர்கள் கவனித்துக் கொள்ள வேண்டியதும் மிக அவசியமாகும்.

மேலும் படிக்க

அடடா! இந்த உணவுகளை இரவில் சாப்பிடக் கூடாதாம்: ஏன் தெரியுமா?

பூண்டு தண்ணீரை தினமும் குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

English Summary: Parents beware: Cholesterol increases in children! Published on: 03 April 2023, 03:26 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.