
ஒவ்வொருவருக்கும் முடி வளர்வதில் வெவ்வேறு முறை இருக்கும். ஆனால் அடர்த்தியான முடி என்றால் அனைவருக்கும் ஆர்வம் இருக்கும். அந்த வகையில் முடி அடர்த்தியாக வளர செய்வதற்கு எளிமையாக என்ன செய்வது என்று யோசித்தால் கடுகு எண்ணெய் ஒரு நல்ல தீர்வாக இருக்கிறது. இது முடியை அடர்த்தியாக வளர வைக்குமாம். மேலும் தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
உங்களின் முடி அடர்த்தியாக வளர்வதற்கு கடுகு எண்ணெயை தேவையான அளவிற்கு வாங்கி வைத்துப் பயன்படுத்துங்கள் இதில் இருக்கக்கூடிய விட்டமின் மற்றும் புரோட்டின் என அனைத்துச் சத்துக்களும் தலை முடி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதை எப்படி பயன்படுத்தலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.
பயன்படுத்தும் முறைகள்
- ஒரு சிறிய அளவிலான பவுலில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு கெட்டியான தயிரினை எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.
- தயிர் புளிப்பு அல்லாமல் இருக்க வேண்டும்.
- தயிருடன் இரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு வெங்காயச் சாறு எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.
- சின்ன வெங்காயத்தினை மிக்ஸியில் அரைத்தோ இடித்தோ சாறு எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.
- பின்னர் இவற்றுடன் ஒரு டீஸ்பூன் அளவிற்கு கற்றாழை ஜெல் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- ஒரு டீஸ்பூன் அளவிற்கு கடுகு எண்ணெய் மற்றும் கால் டீஸ்பூன் ஊற வைத்த வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு நைசாக மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.
- இவற்றை நன்கு கலந்து வைத்துக் கொண்டு தலையின் எல்லா இடங்களிலும், குறிப்பாக முடியின் வேர்கால்களில் தடவி உலர விட்டுவிடுதல் வேண்டும்.
20 நிமிடத்தில் இருந்து 1/2 மணி நேரம் வரை நன்கு காய்ந்து உலர விட்டு பின்பு தலைக்குச் சாதாரணமாக எப்பொழுதும் போல அலசிக் கொள்ளலாம். இந்த ஒரு பேக்கை வாரம் இரண்டு முறை தாராளமாக பயன்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இரண்டு முறை பயன்படுத்திப் படிப்படியாக வாரம் ஒரு முறை என்று குறைத்துக் கொண்டே வரலாம்.
வெங்காய சாற்றில் இருக்கும் சல்ஃபர் தலைமுடியின் ஸ்கேல்பிற்கு நல்ல ஒரு ரத்த ஓட்டத்தினைக் கொடுக்கக் கூடியது எனக் கூறப்படுகிறது. தயிர் ஈரப்பதத்தை தக்க வைத்து வறட்சி தன்மையினைப் போக்கக்கூடியதாக இருக்கின்றது. வெந்தயம் குளிர்ச்சியைத் தரும். கற்றாழை ஜெல் முடியை மென்மையாக மாற்றும். கடுகு எண்ணெய் நன்கு தூண்டுதல் கொடுத்து முடியை வேகமாக வளர செய்கின்றது. எனவே நீங்களும் பயன்படுத்தி பலன் பெறுங்கள்.
மேலும் படிக்க
அவரைக்காயில் இவ்வளவு நன்மைகளா? ஆச்சர்யமூட்டும் பலன்கள்!
தென்னந் தோப்பில் ஊடுபயிர் செய்ய சிறந்த பயிர்கள் என்னென்ன?