சைக்கிள் ஓட்டிய அனுபவம் என்பது நம்மில் பெரும்பாலானோருக்கு சிறுவயதிலேயேக் கிடைத்திருக்கும்.அப்படி, குறிப்பிட்ட வயதில் ஆசையாக ஓட்டிய சைக்கிளை இன்னும் பொக்கிஷமாக வைத்துப் பராமரிப்பவர்களும் இருக்கிறார்கள். அந்தவகையில், சைக்கிள் ஓட்டுவதுதான், மிகச்சிறந்த எளிய உடற்பயிற்சி. வீட்டில் உள்ள அனைவராலும் செய்ய கூடிய ஒரு உடற்பயிற்சி. இந்த சைக்கிள் நமக்கு பலவித நன்மைகளை அளிக்கிறது.
இதய ஆரோக்கியம்
சைக்கிள் ஓட்டும் போது இதயத் துடிப்பு அதிகரிக்கிறத. இது இதய ஆரோக்கியத்திற்கு ஒரு வகையான உடற்பயிற்சியாக இருக்கும். இதுவரை பல ஆய்வுகளின்படி, சைக்கிள் ஓட்டுதல் போன்ற செயல்பாடுகள் இதயம் மற்றும் இரத்த நாளங்கள் ஆபத்தை குறைக்கும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோய்
சைக்கிள் ஓட்டுதல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். உண்மையில், ஒரு நாளைக்கு 2 மணி நேரம் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு பெருங்குடல் புற்றுநோயின் ஆபத்தை குறைப்பதாக கூறப்படுகிறது.
மன அழுத்தம்
சைக்கிள் ஓட்டுதல் என்பது ஒரு வகையான ஏரோபிக் உடற்பயிற்சி ஆகும். இதனுடன், பல ஆய்வுகள் உடற்பயிற்சி செய்வதன் மூலம் மனநலம் மேம்படும் என்று காட்டுகின்றன. எனவே சைக்கிலிங்க் செய்தால் மன அழுத்தத்தை குறைக்க உதவும்.
உடல் எடை
நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், சைக்கிலிங்க் பெஸ்ட் சாய்ஸ் ஆகும். உண்மையில், இதுவரை பல ஆய்வுகளின் முடிவில், இது கலோரிகளை கரைப்பதில் உதவும் என்பதைக் காட்டுகின்றன. சுமார் 6 மாதங்கள் சைக்கிள் ஓட்டினால், 12% எடையைக் குறைக்கலாம்.
நீரிழிவு நோய்
சைக்கிள் தொடர்ந்து ஓட்டினால் டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தையும் குறைக்கலாம். உண்மையில், ஒரு ஆராய்ச்சியின் படி, சைக்கிள் ஓட்டுதல் போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுப்பட்டால் டைப் 2 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயம் கணிசமாகக் குறைக்கும்.
தசைகளை வலுப்படுத்த
சைக்கிள் ஓட்டும் போது கால்களின் உதவியுடன் பெடலிங் செய்யப்படுகிறது. இதன் போது கால்கள் மேலிருந்து கீழாக வட்டமாக நகரும். இதன் மூலம், கால்களின் தசைகள் முதல், உடலின் கீழ் பகுதி மற்றும் மேல் பகுதியின் தசைகள் வலுவடையும்.
மேலும் படிக்க...