1. வாழ்வும் நலமும்

டி.வி. பார்த்துக்கொண்டே சாப்பிடலாமா? கூடாதா?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Can you eat while watching TV? Shouldn't

டி.வி எனப்படும் தொலைக்காட்சி என்பது நம் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்துவிட்ட ஒன்று. ஏனெனில், வேலைமுடிந்து வீடு திரும்பி சற்று ஓய்வு எடுக்கும் நமக்கு இருக்கும் பெரிய பொழுதுபோக்கும் டிவிதான். உலக நடப்புகளை உடனேக் கொண்டுவந்து சேர்க்கும் கருவியும் அதுதான். எனவே நாம் சாப்பிடும்போது, டிவி பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.

லேப்டாப்பை இயக்கியபடி சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். அப்படி சாப்பிடும்போது கண்களின் பார்வை முழுவதும் திரையின் மீது பதிந்திருக்கும்.
சாப்பிடும் உணவின் சுவை மற்றும் வாசனையை நுகராமல் திரையை பார்த்துக்கொண்டே இயந்திரத்தனமாக சாப்பிடும்போது, சாப்பிடும் அளவு தெரியாது.

அஜீரணம்

வழக்கத்தை விட கூடுதலாக சாப்பிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதிகமாக சாப்பிட்டுக்கொண்டிருப்பதாக மூளை சமிக்ஞை செய்யும். கவனம் முழுவதும் திரையில் தென்படும் காட்சிகளின் மீது பதிந்திருப்பதால் மூளையின் சமிக்ஞையை உணராமல் சாப்பிட்டு முடிப்பதற்கு முனைவார்கள். நன்றாக மென்று சாப்பிடாமல் விரைவாக சாப்பிட்டு விடுவார்கள். அப்படி சாப்பிடுவது வயிற்று உப்புசம், அஜீரணம் போன்ற செரிமான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

எடை கூடும்

டி.வி. பார்த்துக்கொண்டே அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கக் கூடும். நீங்கள் எவ்வளவு சாப்பிட்டிருக்கிறீர்கள் என்பதை மூளை பதிவு செய்யாது. சாப்பிட்ட திருப்தியும் இருக்காது.
அதனால் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே பசி எடுக்கத் தொடங்கிவிடும். சிப்ஸ், சாக்லேட், ஐஸ்கிரீம் போன்றவற்றை நாடுவீர்கள். டி.வி. பார்த்துக்கொண்டே அவற்றை சாப்பிடுவது ருசியாக இருப்பது போல் தோன்றும். அதனால் இனிப்பு பொருட்கள் மீது நாட்டம் அதிகரித்துவிடும். அவை எந்தவிதமான உடல்நலப் பலன்களையும் வழங்காமல் எளிதாக உடல் எடையை அதிகரிக்க செய்துவிடக் கூடும்.

எப்படி சாப்பிடுவது சரி

எத்தகைய உணவுகளை உட்கொண்டாலும் நன்றாக மென்று சாப்பிடும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும். அந்த உணவு எத்தகைய பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அதன் சுவை மற்றும் நறுமணத்தை நுகர வேண்டும். நீங்கள் வயிற்றுக்கு போதுமான அளவு சாப்பிட்டு விட்டீர்கள் என்ற சமிக்ஞை மூளைக்கு செல்ல சுமார் 20 நிமிடங்கள் ஆகும் என்பது உணவியல் நிபுணர்களின் கருத்து. .

அதற்கேற்ப உணவை நன்றாக மென்று மெதுவாக சாப்பிடும்போது சமிக்ஞை மூளைக்கு செல்வதற்கு போதுமான அவகாசம் கிடைக்கும். அதிகமாக சாப்பிடுவதையும் தடுத்துவிடும். என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதை விட அதை எப்படி சாப்பிடு கிறீர்கள் என்பது முக்கியமானது.

மேலும் படிக்க...

ரூ.1லட்சம் பென்சன் தரும் மத்திய அரசின் மகத்தானத் திட்டம்!

Indian Air Forceஸில் வேலை - பிளஸ் 2 படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!

English Summary: Can you eat while watching TV? Shouldn't Published on: 01 June 2022, 12:11 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.