பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 19 April, 2022 3:01 PM IST
Don’t take Diet to lose weight eat this!

கொழுப்பைக் குறைக்க எந்த வித டையட்டும் தேவையில்லை. சில உணவுப் பொருட்களை மிகுதியாக உணவில் இணைத்துக் கொண்டாலே கொழுப்பைக் குறைக்க முடியும். அந்த வகையில் காய்கறிகளாகக் கத்தரிக்காய், வெங்காயம் முதலானவைகளும், பழங்களில் எலும்பிச்சை, ஆரஞ்சு போன்றவையும், கீரயில் பசலைக்கீரையும் என சில உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒன்று: கத்தரிக்காய்
கத்தரிக்காயில் கலோரிகளே இல்லை. அதோடு நார்ச்சத்து இருப்பதால் உடலில் கொலஸ்ட்ரால் உறுஞ்சப்படுவது குறைக்கப்படும். எனவே, இதை உட்கொண்டால் கொழுப்புத் தேங்காமல் உடலனை நலமுடன் வைத்துக் கொள்ள பயனுள்ளதாக இருக்கும்.
இரண்டு: வெங்காயம்
வெங்காயம் உண்பதால் இரத்தத்தில் உள்ள கலோரிகள் எரிக்கப்படும். இதை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் கொலஸ்ட்ரால் குறைவதோடு இதயமும் அரோக்கியமாக இருக்கும்.
மூன்று: பழங்கள்
சிட்ரஸ் ஆசிட் இருக்கக் கூடிய எழும்பிச்சை, கமலா ஆரஞ்சு முதலான பழங்களை உண்பதால் கொழுப்புகள் குறையும். இவை போன்ற பழங்களை உண்டால் இரத்தக் நாளங்களில் உள்ள கொழுப்புகள் குறைக்கப்பட்டு இதயம் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும்.

நான்கு: கீரை
பசலைக் கீரையில் லூடின் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் இவை கொழுப்புக்களைக் கரைக்கும் தன்மை கொண்டதாக இருக்கின்றது. கீரையை வாரம் ஒருமுறை எடுத்துக் கொள்வது நல்ல பலனளிக்கும்.
ஐந்து: பூண்டு
பூண்டில் அலிசின் எனும் இதயத்தைப் பாதுகாக்கும் பொருள் அதிகமாக உள்ளது. மேலும் இதில் நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கும் தன்மை அதிகம் உள்ளது. எனவே, இது குளஸ்ட்ரால் அளவை அதிகமாகக் குறைக்க உதவும். தினமும் ஒரு பல் பூண்டை நேரடியாக சாப்பிட்டால் மிகுந்த பலன் கிடைக்கும்.

ஆறு: வெண்டைக்காய்
இதில் அதிகமாக நார்ச்சத்து மற்றும் குறைவான கலோரிகள் இருப்பதால் இதை உண்பதன் மூலம் கொழுப்பைக் குறைக்க முடியும். எனவே இது உடல் எடை குறைக்க உதவும். அதோடு, நீரிழிவு நோய் உள்ளவர்களும் இதை உண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

ஏழு: பீன்ஸ்
நார்ச்சத்து மற்றும் ஸ்டார்ச்சு இருப்பதால் பீன்ஸ் கொழுப்பைக் குறைக்கும் முக்கிய உணவாக இருக்கின்றது. இதனை சூப்பாகச் செய்து உண்டால் நல்ல பலன் கிடைக்கும். அதாவது, பீன்ஸைத் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, அந்த பீன்ஸ் சாறு இறங்கிய தண்ணீரைக் குடித்து வந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.

எட்டு: தேன்
நாள்தோறும் சர்க்கரை போட்டு உண்ணும் உணவில் சர்க்கரைக்கு பதில் தேனைச் சேர்த்து உண்டால் கொழுப்பு எளிதில் குறைக்கப்படும். இதைத் தொடர்ந்து வெதுவெதுப்பான நீரில் இரண்டு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் கொழுப்பு விரைவில் குறையும்.
ஒன்பது: தயிர்
நாம் உண்ணும் உணவில் தயிரைத் தொடர்ச்சியாகச் சேர்த்து வந்தால் நல்ல பலனைப் பெறலாம். கொழுப்பு எளிதில் குறையும். அதோடு, கொழுப்பும் தேங்காது. தொடர்ந்து உட்கொள்வதால் தொப்பைக் குறைவதோடு உடல் எடையும் குறையும்.

பத்து: பட்டை
பொதுவாகப் பட்டை போன்ற பொருட்களை இறைச்சி சமைக்கும் பொழுது சேர்த்துச் சமைப்பது வழக்கம். இதை ஏன் சேர்க்கிறார்கள் என்றால் நல்ல செரிமானத்திற்காக ஆகும். இதை தனித்து நேரடியாக உண்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். காலையில் டீ,, காபி அருந்தும் போது சிறிதளவு பட்டைத் தூளை இட்டுக் குடித்து வருவது நல்லது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைச் சீராக வைக்க உதவுகிறது. மேலும் கொழுப்பைக் குறைத்து, உடல் எடையைச் சமநிலையில் வைக்க உதவுகிறது.

இது போக சால்மன் மீன், க்ரீன் டீ போன்றவற்றையும் உணவில் நாள்தோறும் சேர்த்து உண்டு வந்தால் நல்ல பலனைப் பெறலாம்.

மேலும் படிக்க

மிகவும் சக்தி வாய்ந்த கொழுப்பை கரைக்கும் பழங்கள்

கொழுப்பு இல்லா மோர் - உடல் எடையைக் குறைக்கும் Best Tonic!

English Summary: Don't take Diet to lose weight eat this!
Published on: 19 April 2022, 02:56 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now