இன்றைய நிலையில் சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் இல்லாதவர்களை பார்ப்பது மிகவும் அரிதாகிவிட்டது. இந்நிலையில், மூன்று காய்கறிகளை கொண்டு தயாரிக்கப்படும் காய்கறி ஜூஸ் குடிப்பதால் சர்க்கரை நோயிலிருந்து விடுதலை கிடைப்பதோடு, பல நோய்களில் இருந்தும் நம்மை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம். இதை எப்படி தயாரிப்பது மற்றும் எந்த நேரத்தில் சாப்பிடுவது என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
பாகற்காய், வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி ஆகியவை அன்றாடம் வீட்டில் பயன்படுத்தப்படும் சில காய்கறிகளில் அடங்கும். இந்த காய்கறிகள் அனைத்திலும் சத்துக்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. இந்த மூன்றும் சாலட் வடிவில் மிகவும் விரும்பப்படுகிறது. பாகற்காய், வெள்ளரி மற்றும் தக்காளி ஆகியவை கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஜீஸ்ஸைக் குடிப்பது ஆரோக்கியத்திற்குப் பல நன்மைகளைத் தருகிறது என்பது அனைவரும் அரிய வேண்டிய ஒன்றாகும்.
புரதம், நார்ச்சத்து, சோடியம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் பாகற்காயில் இருக்கின்றன. இந்த மூன்றின் ஜூஸை எவ்வாறு செய்யலாம், குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
பாகற்காய், வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி ஆகியவை நீரிழிவு அல்லது ப்ரீடியாபயாட்டீஸ் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், பாகற்காய், வெள்ளரி மற்றும் தக்காளி சாறு குடிக்க வேண்டும். இந்த ஜூஸை தினமும் சாப்பிடுங்கள். இது சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.
இந்த மூன்றின் சாறு, மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு அருமருந்து. பாகற்காய் மற்றும் வெள்ளரிக்காயில் நல்ல அளவு நார்ச்சத்து உள்ளது. இது உங்கள் உணவை எளிதில் ஜீரணிக்கும். இது தவிர, குடல்களை சுத்தப்படுத்த உதவுகிறது. இந்த சாறு வயிற்றை சுத்தம் செய்ய மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சளி, இருமல் போன்ற நோய்கள் குளிர்காலத்தில் மிகவும் பொதுவானவை. அதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த ஜூஸை குடிக்கலாம். வைட்டமின் சி தக்காளியில் நல்ல அளவில் காணப்படுகிறது. அதனால்தான் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் உதவுகிறது. மேலும், அடிக்கடி சளி தொல்லை ஏற்பட்டு வந்தால், இந்த சாற்றை தினமும் சாப்பிடுங்கள்.
பாகற்காய், வெள்ளரி மற்றும் தக்காளி சாறு தயாரிக்க, முதலில் பாகற்காய் தோலை நீக்கவும். அதன் பிறகு வெள்ளரி மற்றும் தக்காளியை மெல்லியதாக நறுக்கி, இந்த மூன்றையும் மிக்ஸியில் போட்டு அதனுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்க்க வேண்டும். இப்பொழுது அதன் சாறு எடுத்து வடிகட்டி, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க