இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 1 November, 2021 7:45 AM IST
Credit : The News Minute

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் குறைந்துள்ளதால், தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் பார்களைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு (Curfew extension)

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவதை அடுத்து தமிழகத்தில், பல விதமான தளர்வுகளுடன் நவம்பர் மாதம் 15 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது

600 நாட்களுக்குப் பிறகு (After 600 days)

தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளும் நேரடி வகுப்புகளை தொடக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையுள்ள வகுப்புகளை சுழற்சி முறையில் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 600 நாட்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

திரையரங்குகள் (Theaters)

மேலும், பண்டிகை காலம் என்பதால் பொதுமக்கள் தேவையைக் கருத்தில் கொண்டு, அனைத்து வகைக் கடைகள், உணவகங்கள் இரவு 11.00 மணிவரை இயங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், திரையரங்குகள் 100 சதவீதம் பார்வையாளர்களுடன் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, மதுபிரியர்களுக்கு ஓர் நற்செய்தியாக நவம்பர் 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்கள் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தின் ‘குடி’ மகன்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

வழிகாட்டு நெறிமுறைகள் (Guidelines)

  • டாஸ்மாக் பார்கள் இயங்க தமிழக அரசு அனுமதிக் கிடைத்திருப்பதால், மதுப் பிரியர்கள், கொரோனாப் பரவலைக் கருத்தில் கொண்டு, சமூக இடைவெளியைப் பின்பற்றி, அமர்ந்து மது அருந்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  • பார்களின் நுழைவாயிலில் சானிடசைர்கள் வைக்கப்படவேண்டும்

    பாருக்கு மது அருந்த வருபவர்களுக்கு தெர்மல் ஸ்கேனிங் செய்து கொள்ள வேண்டும்

  • மாஸ்க் அணியாமல் வருபவர்களை அனுமதிக்கக் கூடாது.

  • மேலேக் கூறிய வழிகாட்டு நெறிமுறைகள் கட்டாயம் கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

ரஜினியிடம் நேரில் உடல்நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

ரஜினிகாந்த்துக்கு இன்பார்க்ட் பாதிப்பு - மருத்துவமனையில் சிகிச்சை

English Summary: Echo of Corona Low- Allow bars to open!
Published on: 01 November 2021, 07:39 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now