1. வாழ்வும் நலமும்

தீபாவளிப் பட்டாசு வெடிக்கும்போது அதுமட்டும் வேண்டாம்- எச்சரிக்கை கவனம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Don't be the only one when Deepavali firecrackers explode- Warning attention!

கொரோனா காலம் என்பதால், நாம் அனைவரும் கைகளில் சானிடைஸரைப் போட்டேப் பழகிவிட்டோம். ஆனால் தீபாவளிப் பட்டாசு வெடிக்கும்போது சானிடைஸரைப் (Sanitizer) பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

சானிடைஸர் (Sanitizer)

ஏனெனில் சானிடைஸரைப் போட்டுக்கொண்டு, பட்டாசு வெடித்தால், தீக்காயங்கள் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வரும் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிப் பண்டிகையின் முத்தாய்ப்போ மத்தாப்பும், வெடிகளும்தான்.அதாவது பட்டாசு இல்லாமல் தீபாவளியே இல்லை எனலாம்.

தீபாவளிக் கொண்டாட்டத்தின் மாஸ் பட்டாசு என்றபோதிலும், அதனை வெடிக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் மிக மிக முக்கியம்.

இதனைக் கருத்தில்கொண்டு, பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளை மாநில பொதுசுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

விபத்துக்கள் மற்றும் காயங்கள் (Accidents and injuries)

தீபாவளி பட்டாசு வெடிக்கும்போது தீக்காயங்கள் மற்றும் காயங்கள் மிகவும் பொதுவானவை.

தீபாவளி கொண்டாட்டத்தின் போது குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

செய்ய வேண்டியவை (Things to do)

  • திறந்த வெளியில் பட்டாசுகளை வெடித்து, எளிதில் தீப்பிடிக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

  • ஒரு மூடிய கொள்கலனில் பட்டாசுகளைச் சேமித்து, சுற்றியுள்ள எந்த அழற்சி அல்லது எரியக்கூடிய பொருட்களிலிருந்தும் அவற்றை விலக்கி வைக்கவும்.

  • நீண்ட மற்றும் தளர்வான ஆடைகளை அணிவதைத் தவிர்க்கவும், ஏனெனில் அவை தீப்பிடிக்க வாய்ப்புள்ளது. மாறாக, பொருத்தப்பட்ட பருத்தி ஆடைகளை அணியுங்கள்.

  • உங்கள் மேற்பார்வையில் உங்கள் பிள்ளைகள் பட்டாசுகளை வெடிக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

  • சுவாச பிரச்சினை உள்ளவர்கள் கண்டிப்பாக வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும்.

  • பட்டாசுகளை வெடிக்கும்போது, ​​ஒரு கை தூரத்தில் நிற்கவும்.

  • பட்டாசு வெடிக்கும்போது, நெருப்பு ஏற்பட்டால் தண்ணீர் வாளிகள் மற்றும் போர்வை தயார் நிலையில் வைக்கவும்.

  • வாளி தண்ணீரில் பயன்படுத்தப்பட்ட பட்டாசுகளை அப்புறப்படுத்துங்கள்.

  • பட்டாசுக் கொளுத்தும்போது காலணிகளை அணியுங்கள்.

  • சானிடைசர்களை உபயோகித்து விட்டு மத்தாப்புகள், வெடிகள் போன்றவற்றைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.

  • மீறித்தொட்டால் கைகளில் தீக்காயம் உண்டாகும் நிலை வரும்.

  • பட்டாசுகளைக் கையாண்ட பிறகு ஒவ்வொரு முறையும் சோப்பு மற்றும் தண்ணீரால் கைகளைக் கழுவவும்.

  • கையில் பட்டாசுகளைக் கொளுத்த வேண்டாம்.

  • பட்டாசுகளை மெழுகுவர்த்திகள் மற்றும் தீபங்களை எரிக்கும் இடத்தில் விடாதீர்கள்.

  • மின் கம்பங்கள் மற்றும் கம்பிகளுக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது.

  • பாதி எரிந்தப் பட்டாசுகளை ஒருபோதும் வீசாதீர்கள், அவை எரியக்கூடிய பொருளின் மீது விழுந்து தீயை மூட்டலாம்.

  • வெளியில் பட்டு மற்றும் செயற்கை துணிகளை அணிய வேண்டாம்.

    பட்டாசுகளை வெடிக்க திறந்த நெருப்பு (தீப்பெட்டிகள் அல்லது லைட்டர்கள்) பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரக் கட்டுப்பாடு

இதனிடையே சென்னையில் தீபாவளி அன்று, காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் இரவு 7 முதல் 8 மணி வரை என இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நேரக்கட்டுப்பட்டை மீறி பட்டாசு வெடித்தால் மாநகர காவல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தி.நகர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் நகைதிருட்டை தடுக்க 800 போலீஸ் கொண்ட தனிப்படை அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க...

மூட்டுவலியில் இருந்து விடுபடவேண்டுமா? இந்த பயிற்சி நிச்சயம் உதவும்!

ரிக்ஷா ஓட்டுனருக்கு ரூ.3 கோடிக்கு வருமான வரி நோட்டீஸ்- அடக் கொடுமையே!

English Summary: Don't be the only one when Deepavali firecrackers explode- Warning attention! Published on: 30 October 2021, 09:43 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.