காய்கறிகளில் பெரும்பாலானோரின் விருப்பமானவற்றின் பட்டியலில் இடம்பெற்றிருப்பது கத்திரிக்காய்.
ஏழைகளின் காய் (The fruit of the poor)
ஏழைகளின் காய் என வருணிக்கப்படும் கத்திரிக்காய் எண்ணற்ற நன்மைகளைக் கொண்டது. வைட்டமின் சி, ஈ சத்துகள், இரும்புசத்து, பாஸ்பரஸ் போன்ற பல சத்துகளைத் தன்னகத்தேக் கொண்டது கத்திரிக்காய்.
எலும்பு வளர்ச்சி (Bone growth)
இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது.
மலச்சிக்கல் (Constipation)
நீர் அதிகம் அருந்தாமை, உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் இன்று பலரும் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதியுறுகின்றனர்.
செரிமானக் கோளாறுகள் (Digestive disorders)
கத்திரிக்காய் கூட்டு, பொரியல் போன்ற பதார்த்தங்களாக செய்து சாப்பிட்டு வருபவர்களுக்கு செரிமானக் கோளாறுகள் நீங்கும். உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனையையும் நீக்கும்.
இதய நோய் (heart disease)
கத்திரிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து உண்பவர்களுக்கு இதய தசைகள் நன்கு வலுப்பெற்று, இதயம் சம்பந்தமான நோய்கள் உண்டாகாது.
கற்கள் கரையும் (The stones will melt)
கத்திரிக்காய் அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்து, சிறுநீரகங்களின் நலம் காக்கப்படும்.
மூலநோய் (Hemorrhoids)
எப்படிப்பட்ட மூல நோயையும் வாரத்திற்கு இரண்டு முறை கத்திரிக்காயை சமைத்து உண்டு வருவதால் மூல நோய்களில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
நுரையீரல் தூய்மை (Lung purity)
நாம் அன்றாடம் சுவாசிக்கும் காற்றில் கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமிகளும், மாசுகளும் அதிகம் இருக்கின்றன. இவை எல்லாம் நாம் சுவாசிக்கும் போது நமது நுரையீரல்களுக்கு சென்று விடுகிறது. கத்திரிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வருபவர்களுக்கு நுரையீரல் தூய்மையடையும், சுவாச பிரச்சனைகளும் நீங்கும்.
உடல் எடை குறையும் (Weight loss)
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் வாரம் இரண்டு அல்லது மூன்று முறை கத்திரிக்காய் சாப்பிட்டு வந்தால் விரைவாக உடல் எடையை குறைக்க முடியும்.
அதிக இரும்புச்சத்துக் குறையும் (Excess iron will decrease)
நமது உடல் பலம் பெற்றிருக்கவும், ரத்தத்தில் இரும்புச்சத்து சரியான அளவில் இருப்பது அவசியமாகும். தேவைக்கு அதிகமாக நமது உடலில் இரும்புச்சத்து இருந்தாலும் அது உடல் ஆரோக்கியத்தில் பல தொந்தரவுகளை நமக்கு ஏற்படுத்தும். கத்திரிக்காய் அடிக்கடி சாப்பிடுவதால் நமது உடலில் இருக்கும் அளவுக்கதிகமான இரும்புச்சத்தை உடலில் இருந்து நீக்கும்.
மேலும் படிக்க...
வறட்சிகாலத்தில் பயிருக்கு உயிரூட்டும் திரவ நுண்ணுயிர் உரங்கள்!!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.7,000? முழு விபரம் உள்ளே!
கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் வேகத்தில், உலக அளவில் இந்தியா முதலிடம்