1. வாழ்வும் நலமும்

நாள்தோறும் சிறிது வேர்க்கடலை- இறப்பை ஒத்திப்போட்டு, உயிர்காக்கும் மருந்து!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
A little bit of peanuts daily- Delaying death, life-saving medicine!

Credit : Samayam Tamil

தினமும் குறைந்தது 10 கிராம் வேர்க்கடலையை சாப்பிடும் பழக்கத்தை ஆண்களும், பெண்களும் வழக்கமாக்கிக்கொண்டால், உயிர்க்கொல்லி நோய்களில் இருந்து எளிதில் தப்பித்துவிடலாம்.

வேர்க்கடலைப் ப்ரியர்கள் (Peanut lovers)

தமிழ்நாட்டின் விவசாயத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது வேர்க்கடலை சாகுபடி. பொழுதுப்போக்கு திண்பண்டமாகத் திகழும் வேர்க்கடலையை ருசிக்க விரும்பாதவர்கள், தமிழகத்திலேயே இல்லை எனக் கூறலாம்.

பல உருவங்கள் ருசித்தது (Taste many shapes)

ஏனெனில் உடல் ஆராக்கியத்திற்கு வித்திடும் இந்த வேர்க்கடலையை, பர்பி, கடலைமிட்டாய், மசாலாக் கடலை, வேக வைத்தக்கடலை எனப் பல்வேறு விதங்களில் நாம் பிறந்தது முதல் ருசித்து வருகிறோம்.

நம்பமுடியாதப் பலன்கள் (Incredible benefits)

இவ்வாறு, நம்மோடு கலந்த வேர்க்கடலையை தினமும் சாப்பிட்டு வர, நம்பமுடியாத பலன்களையும் நாம் பெற முடியும் என்கிறது அறிவியல் ஆய்வுகள்.

மருத்துவப் பயன்கள் (Medicinal uses)

இதயநோய் (Heart disease)

இதய நோயால் பாதிக்கப்பட்டோர் மற்றும் புற்றுநோய்க்கு உள்ளானோர், தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், தொடர்ந்து வேர்க்கடலையைச் சாப்பிட்டு வர, நோய் தாக்குதலால் ஏற்படும் முந்தைய உயிரிழப்புகளை தடுக்கலாம்.

உயிர்கொல்லிகளுக்கு குட்பை (Goodbye to the killers)

நாள் ஒன்றுக்கு குறைந்தது 10 கிராம் வேர்க்கடலையை ஆண்கள், பெண்கள் என சாப்பிட்டு வர, உயிரிழப்புக்கான முக்கிய காரணங்களாக கருதப்படும் நோய்களில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம். நல்ல பலன்கள் கிடைக்காது.

பீனட் பட்டர் (Peanut Butter)

வேர்க்கடலையை சாப்பிடுகிறேன் என்ற பெயரில், சந்தைகளில் விற்கப்படும் பீனட் பட்டர்களை (Peanut Butter)வாங்கி சாப்பிட்டு வந்தால் எந்த பயனும் ஏற்படாது என நெதர்லாந்து நாட்டின் மாஸ்ட்ரிக்ட் பல்கலைக்கழகம் நடத்தியஆய்வில் தெரியவந்துள்ளது.
ஏனென்றால், வேர்க்கடலையிலிருந்து தயாரிக்கப்படும் பீனட் பட்டரில் டிரான்ஸ் கொழுப்பு அமிலங்கள் மற்றும் உப்புச் சத்துகள் இருப்பதால் வேர்க்கடலையிலிருந்து கிடைக்கும் நல்ல பயன்களைத் தடுக்கிறது.

அதிக ஊட்டச்சத்து (More nutrition)

வேர்க்கடலைக்கும், மரங்களிலிருந்து பெறப்படும் கடலை வகைகளிலும் பல்வேறு ஊட்டச்சத்து செறிந்து காணப்படுகின்றன. குறிப்பாக, வைட்டமின்கள், நார்ச்சத்துகள், ஆக்ஸிஜனேற்றிகள், மோனோசாச்சுரேட்டட், பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் போன்றவை உள்ளன.

இறப்பை ஒத்திப்போடும் (Postponing death)

இவை, மனிதர்களில் இறப்பு விகிதங்களை குறைப்பதாக நெதர்லாந்து நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நீரழிவு நோய் வராது (Diabetes does not come)

வேர்க்கடலையைத் தொடர்ச்சியாக பெண்கள் சாப்பிட்டு வர, அவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படாது எனவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

நன்மை பயக்கும் எண்ணெய் வித்துக்கள்:புதிய ரக வேர்க்கடலை: இந்தியா வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் கண்டுபிடிப்பு!

மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் வேர்க்கடலை!

இதயத்திற்கு ஆற்றல் அளிக்கும் எள்!

English Summary: A little bit of peanuts daily- Delaying death, life-saving medicine!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.