Health & Lifestyle

Monday, 04 January 2021 09:48 AM , by: Elavarse Sivakumar

Credit : Pinterest

மோர் (Butter Milk).... இதனை நீருடன் சேர்த்து பெருக்கி உண்டால், நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழாலாம்.

எனினும் பாலில் இருந்து கிடைக்கும் தயிருக்கு உள்ள மவுசு எப்போதுமே இந்த மோருக்கு கிடையாது. உண்மையில் மோரில் உள்ள சத்துக்களைப் பற்றித் தெரிந்துகொண்டால், நாம் யாருமே அதனை உதாசினப்படுத்தமாட்டோம்.

தொற்று நோய்களுக்கு எதிராக போராட முடியாமல் நோய் எதிர்ப்பு திறனை குறைவாக கொண்டவர்கள் மோர் பருகுவது அவசியம். இதிலிருக்கும் ஆரோக்கியமான பாக்டீரியா, கார்போஹைட்ரேட் மற்றும் லாக்டிக் அமிலம் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

ஆயுர்வேதத்தில், மோர் சாத்விக உணவாக கருதப்படுகிறது. தயிரில் இருந்து தயாரிக்கப்படும் இந்த பானம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

நெஞ்சு எரிச்சலைப் போக்கும்த் தடுக்கும் (Control Acidity).

அதிகமாக சாப்பிட்டோ, கார உணவை சாப்பிட்டோ அசிடிட்டி பிரச்சினையை எதிர்கொள்பவர்கள் ஒரு டம்ளர் மோர் பருகலாம்.

தினமும் மதிய உணவுடன் மோர் சேர்த்துக்கொள்வதையோ, அல்லது காலை வேளையில் ஒரு டம்ளர் மோர் பருகுவதையோ வழக்கமாக மாற்றிக்கொண்டால், அசிடிட்டிக்கு குட்பை சொல்லலாம். கூந்தல் மற்றும் சருமத்திற்கும் ஆரோக்கியம் சேர்க்கும்.

எடையைக் குறைக்க(Weight Loss)

உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு மோர் சிறந்த பானமாகும். இதில் ஊட்டச்சத்துக்களும், நொதிகளும் நிறைந்திருக்கின்றன. கலோரிகள் மிகவும் குறைவு. கொழுப்பு அறவே இல்லை. அதேநேரத்தில் உடலுக்கு உடனடியாக ஆற்றலை கொடுக்கும். நீர்ச்சத்தை தக்கவைத்துக்கொள்ளவும் உதவும். மோரில் கால்சியம், பொட்டாசியம், புரதம், வைட்டமின்கள் உள்ளிட்ட பல தாதுக்களும் உள்ளன. பசியைக் கட்டுப்படுத்தும் சிறந்த பானமாகவும் இது விளங்குகிறது.

நீரிழப்பு (Dehydration)

உடலில் இருந்து அதிகப்படியான நீர் வெளியேறும் போது, உடல் ஒட்டுமொத்த ஆற்றலையும் இழக்கக்கூடும். சிலருக்கு மயக்கமும் உண்டாகும். வியர்வை, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை நீரிழப்புக்கான பொதுவான அறிகுறிகள். கோடையில் நீரிழப்பைத் தவிர்க்க உப்பு, சீரகம், கருப்பு மிளகு ஆகியவற்றை சேர்த்து மோர் தயாரித்து பருகலாம். இவற்றில் இருக்கும் அதிகப் படியான எலக்ட்ரோலைட்டுகள் நீரிழப்பை ஈடு செய்ய உதவும்.

எலும்புகள் வலுவடையும் (Borne strength)

தினமும் உடலுக்கு 1000 மி.கி கால்சியம் தேவை. ஒரு கப் மோரில் சுமார் 284 மில்லி கிராம் கால்சியம் உள்ளது. எனவே மோர் பருகுவதன் மூலம் அன்றாட கால்சியம் தேவைகளில் 28 சதவீதத்தை பூர்த்தி செய்துவிடலாம். வயதாகும்போது எலும்புகளின் அடர்த்தி குறையும். கால்சியம் அதிகம் கொண்ட உணவுப் பொருட்களை உட்கொண்டு வந்தால் எலும்புகள் வலுவடையும்.

ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் (Control Blood Pressure)

மருத்துவ வழிகாட்டுதல் களின்படி, ஒருவருடைய ரத்த அழுத்தம் 130/80 என்ற விகிதத்தில் இருக்க வேண்டியது அவசியம். மோரில் பயோ ஆக்டிவ் (Bio-Active) புரதம் ஏராளமாக காணப்படுவதாக ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். தினமும் மோர் பருகுவதன் மூலம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம். இதயம் சார்ந்த பிரச்சினைகளும் ஏற்படாது.

மலச்சிக்கல்(Constipation)

வாய்வு மற்றும் மலச்சிக்கல் பிரச்சினையைப் போக்குவதற்கு பண்டைய காலங்களில் இருந்து மோர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நம் அன்றாட உணவில் மோரை சேர்த்துக்கொள்வதன் மூலம், குடல் பிரச்சினைகளை சரிசெய்து மலச்சிக்கலை நீக்கிவிடும். மேலும் செரிமான அமைப்பை சரிசெய்யவும் மோர் உதகிறது.

மேலும் படிக்க...

மாதம் ரூ.42 செலுத்தினால் ஆயுள் வரை ஓய்வூதியம்- அடல் பென்சன் யோஜனா திட்டம்!

பொங்கலுக்கு வலுசேர்க்கும் மண்பானைகள் - தயாரிப்பு பணிகள் தீவிரம்!

ஆரோக்கியத்தைப் பெற வேண்டுமா? பாரம்பரிய உணவுகளுக்குத் திரும்புங்கள்!

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)