Health & Lifestyle

Thursday, 01 July 2021 03:44 PM , by: KJ Staff

Vendhayam

வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன. மேலும் சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியசத்து, பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும், தயாமின், ரிபோபிளேவின், நிகோடினிக் அமிலம், வைட்டமின் “ஏ” போன்றவைகளும் அடங்கியுள்ளன.

வெந்தய விதைகள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இதனை உணவில் பயன்படுத்தும் பொழுது சிறந்த சுவை அளிக்கிறது. பல்வேறு வகையான வியாதிகளை போக்கியும் பல்வேறு பயன்கள் தருகிறது. வெந்தயத்தில் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் அதிக நார்ச்சத்துக்கள் உள்ளன. மேலும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும் எடையை குறைக்கவும் வெந்தயம் உதவுகிறது. பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கால அறிகுறிகளை குறைக்கவும் உதவுகிறது.வெந்தயத்தை நீரில் ஊற வைத்து உண்பதால் இப்படி ஏராளமான நன்மைகள் தரும்  கிடைக்கும்

இது நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. ஊற வைத்த வெந்தயம் இரத்த சர்க்கரை அளவில் மாற்றங்களை உண்டாக்கிறது. முளைத்த வெந்தய விதைகளை விட நனைத்த வெந்தய விதைகள் 30 - 40 சதவீதம் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. வெந்தயத்திலுள்ள எண்ணை பசை தலைமுடிக்கு வளர்ச்சியை, கருமை நிறத்தை தருகிறது. எனவே கூந்தலுக்காக தயாரிக்கப்படும் தைலங்கள் செய்வதற்கு பயன்படுகிறது.

வெந்தயம் குளிர்ச்சியை உண்டாக்கும். சிறுநீரை பெருக்கும். வெந்தயத்தில் துவர்ப்புத் தன்மை அதிகம் காணப்படும் மற்றும் வறட்சியகற்றும் தன்மை கொண்டது. விதையிலுள்ள ஆல்கலாய்டுகள் பசியைக் கூட்டும். நரம்புகளைப் பலப்படுத்தும். அதை தவிர வெந்தய கீரையில் குளிர்ச்சியை உண்டாக்கும் தன்மை இருக்கிறது.

 சித்த, ஆயுர்வேத வைத்திய முறைகளில் வெந்தயம், சீதபேதி, மூலநோய் இவைகளை குணப்படுத்த, முடி உதிர்தல், தோல் நோய், வாய்வுத்தொல்லையை போக்கவும் உதவுகிறது. எண்ணையாக, கரைப்பானாக, லேகியமாக, பொடியாகவும் பயன்படுத்தப்படுகிறது. யுனானி மருத்துவ முறையில் சளி நீக்கவும், மூல நோய் தீர்க்கவும் பயன்படுத்தப்படுகிறது. வெந்தயத்தை வறுத்து, நீர் விட்டு காய்த்து தேன் சேர்த்து சாப்பிட வயிற்று கடுப்பு தீரும். திடீரென ஏற்படும் வயிற்று வலிக்கு வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடியாக்கி மோரில் கலந்து குடிக்க தீரும்.

20 கிராம் வெந்தயத்தை வறுத்து, இடித்து 50 கிராம் வெல்லம் சேர்த்து பிசைந்து ஒரு நாள் நான்குமுறை சாப்பிட சீதபேதி குணமாகும். சிறிதளவு வெந்தயத்தை மோரில் ஊறவைத்து அரைத்து, மோரில் கலக்கி குடிக்க நோய்கள் குணமாகும். வெந்தயத்தை இளநீரில் ஊற வைத்து அரைத்து குடிக்க சீதபேதி கடுப்பு தீரும். மோரில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் உண்ண வாய்வு, பொருமல் நீங்கும். வெந்தயம், கடுகு, பெருங்காயம், மஞ்சள், இந்துப்பு இவைகளை சம அளவு எடுத்து நெய் வறுத்து பொடியாக்கி உணவுடன் உண்ண வயிற்று வலி தீரும்.

மேலும் படிக்க

வெந்தயக் கீரை சாகுபடி செய்வது எப்படி?

சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயம் எதிரியா?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)