Krishi Jagran Tamil
Menu Close Menu

வெந்தயத்தின் நன்மைகள் மற்றும் தீமைகள்

Thursday, 18 April 2019 03:06 PM
fenugreek

பார்ப்பதற்கு சிறு கற்கள் போல கரடு முரடாக இருக்கும் வெந்தயம், ஆனால் உண்மையில் இதில் அடங்கியுள்ள நன்மைகள் நம் உடலுக்கு எத்தகைய பயன்களை தரவல்லது என்பது நம்மில் குறைந்த அளவு மக்களே அறிந்திருப்போம். வீட்டின் அஞ்சறை பெட்டியில் இடம் பெரும் உணவுப் பொருட்களில் ஒன்று. வெந்தயம் என்றாலே ஜீரணத்திற்கும், உடல் உஷ்னத்திற்கும் தான் ஞாபகம் வரும். இந்த வெந்தயத்தை நாம் தினமும் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் எண்ணற்ற பலன்கள் நம் உடலில் உண்டாகும்.

சத்துக்கள்

வெந்தயத்தில் புரதம், கொழுப்பு, நீர், மாவு, ஆகிய சத்துக்குள் அடங்கியுள்ளன. மினெரல், பொட்டாசியம் போன்ற சத்துக்களும் உள்ளது.

fenugreek water

வெந்தயத்தின் சிறந்த பயன்கள் 

வெந்தயத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் நீருடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால்  உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தி வெப்பத்தை தணிக்கிறது.

மலச்சிக்கல் சீராக்கும். உடல் சூட்டினாலும் சிலருக்கு முடி கொட்டும் பிரச்சனை இருக்கும் எனவே வெந்தயத்தில் என்ன பசை இருப்பதால் முடி கொட்டுவது குறைந்து கருமையாகவும், நீளமாகவும் வளர உதவும்.

இதில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இதயம் சார்ந்த பிரச்சனைகளை குறைக்கிறது. வெந்தயத்தில் உள்ள கசப்பு தன்னை நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு நல்ல மருந்தாக உள்ளது.

வெந்தயம் ஊற வைத்த  நீரை தினமும் காலையில் குடித்து வந்தால் அல்சர் பிரச்சனைக்கு  தீர்வு உண்டாகும் மேலு சர்க்கரை நோயானது நாள்பட குணமாக துவங்கும்.

வெந்தயத்தில் நார்சத்து இருப்பதால் அதிக பசி ஏற்படாமல் வயிற்றுக்கு தேவையானதை மட்டும் உட்கொள்ள உதவும். மற்றும் அடிக்கடி சாப்பிடும் பழக்கத்தை குறைக்கும்.

வெந்தயம் சாப்பிடுவதால் நம் உடலில் உள்ள இரத்தத்தை சுத்தப்படுத்தி சீரான இரத்த ஓட்டத்தை உண்டாக்குகிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று  வலிகளுக்கு ஊற வைத்த வெந்தய நீரானது மிக சிறந்தது. மேலும் சாதாரண வயிற்று வலிகளுக்கும் இது சிறந்தது.

fenugreek seeds

அதிகமாக எடுத்து கொண்டால்

அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு, என்பதைப்போல எந்த ஒரு உணவையும் அளவுக்கு அதிகமாக  எடுத்துக்கொண்டால்  பாதிப்பை விலை விப்பதாகவே அமையும்.

அதிக அளவில் வெந்தயத்தை எடுத்துக்கொள்வதால் வாந்தி,குமட்டல் ஏற்படும். உணவுக்கோளாறு இருப்பவர்கள் வெந்தயத்தை உட்கொள்ளவே கூடாது.

மேலும் நீரிழிவு பிரச்சனை இருப்பவர்கள் மாத்திரை சாப்பிடுகிறீர்கள் என்றால் மருத்துவரை ஆலோசித்த பின்னரே வெந்தயத்தை  உட்கொள்ள வேண்டும் இல்லையேல் இரண்டும் எண்டுத்துக்கொண்டாள் சர்க்கரையின் அளவு  மிகவும் குறைந்து விடும்.

K.Sakthipriya
Krishi Jagran 

Fenugreek Fenugreek uses fenugreek benefits Fenugreek sprouts disadvantages of Fenugreek advantages of Fenugreek
English Summary: Did You know about the disadvantages of Fenugreek: lets know what are the Advantages and Disadvantages of fenugreek

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Latest Stories

  1. வெங்காயம் விலை உச்சத்தை தொட்டது ; 100 ரூபாய்க்கு விற்பனை!!
  2. மீன் வளத்தைப் பெருக்க ரூ.40ஆயிரம் வரை மானியம்- மீன்வளத்துறை அறிவிப்பு
  3. குறித்த காலத்தில் மல்லிகைக்கு கவாத்து செய்தால் குளிர்காலத்தில் அதிக மகசூல்!
  4. ரூ.5000 வேண்டுமா? ரொம்ப சிம்பிள் - உங்கள் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்திடுங்கள் போதும்!
  5. FSSAI Job Offer: துணை மேலாளர், உதவி மேலாளர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேவை - முழு விவரம் உள்ளே!!
  6. குமரி மாவட்டத்தில் கும்பப்பூ சாகுபடிக்கு நாற்றங்கால்: ரூபாய் 1200 மானியம்!
  7. அடுத்த 2 நாட்களுக்கு வடதமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு! - சென்னை வானிலை மையம் தகவல்!
  8. உணவின் தரத்தை ஆராய நடமாடும் சோதனை கூடம்! உணவு பாதுகாப்பு துறை மதுரைக்கு வழங்கல்
  9. புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு ; டிசம்பர் 1 கோட்டையை நோக்கி பிரச்சார பயணம்!!
  10. விதை பெருக்கு திட்டம் : நெல் விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு 75% கொள்முதல் விலை - வேளாண் துறை

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.