நம்மில் பலருக்கு அசைவமே பிடித்தமான உணவாக உள்ளது. அதனால்தான் அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்த இருந்த அசைவ உணவகங்கள் தற்போது, தெருவிற்கு ஒன்றாக, மழையில் முளைத்தக் காளான்களைப்போன்று பெருகிவிட்டன.
அத்தகைய உணவகங்களில் அசைவ உணவை சாப்பிடுவதை, வித நம் பாரம்பரிய முறைப்படி வீட்டில் சமைத்துச் சாப்பிடுவதே உடல் நலத்திற்கு நல்லது.
அதிலும் குறைந்தபட்சம், வாரத்திற்கு ஒரு முறையாவது அசைவ உணவை நாக்குத் தேடுகிறது சிலருக்கு. தற்போதைய காலத்தில் அசைவத்தோடு பல உணவுகளை சேர்த்து சாப்பிடுகின்றனர். இதனால் உடலுக்கு பிரச்னைகள் ஏற்படுவதும் அதிகரித்துவருகிறது.
முள்ளங்கி
அசைவ உணவோடு வேகவைத்த முள்ளங்கியை சாப்பிட்டால் இறைச்சியில் உள்ள புரத ஊட்டச்சத்தும், முள்ளங்கியில் இருக்கும் புரத ஊட்டச்சத்தும் அதிகரிக்கும். இதனால் உற்பத்தியாகும் ரத்தம் நச்சுத்தன்மையாக மாற வாய்ப்பு இருக்கிறது.
கீரை
அசைவத்தோடு கீரையை சேர்த்து சாப்பிடுவதால் செரிமான கோளாறு ஏற்பட்டு கல்லீரல் நோய் உருவாவதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது.
ஐஸ்க்ரீம்
ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களை அசைவம் சாப்பிட்டதும் உட்கொண்டால் அது உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும்.
உருளைக்கிழங்கு
அசைவத்தோடு மண்ணுக்கு அடியில் விளையும் கிழங்குகளை சேர்த்து உண்பதால் கிழங்குகள் மற்றும் இறைச்சி செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். மேலும், உடல் எடை அதிகரித்து, வாயு தொல்லை உருவாகும்.
மைதா
மைதா வகை உணவுகளுக்கு செரிமான சக்தி பொதுவாகவே குறைவாக இருக்கும். இதனால் மலச்சிக்கல் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு.
மேலும் படிக்க...
ஓய்வூதியத் தொகை உயர்வு-மத்திய அரசு நடவடிக்கை!
மூத்த குடிமக்களுக்கு ஏசி ரயிலில் ஓசி பயணம்- அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு!