1. செய்திகள்

TNPSC குரூப் 2 தேர்வில் 'மைனஸ்' மதிப்பெண் முறை உண்டு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
TNPSC Group 2 exam has 'minus' scoring system!

அரசு துறைகளில் காலியாக உள்ளப் பணியிடங்களை நிரப்ப ஏதுவாக நடத்தப்பட உள்ள குரூப் 2, 2ஏ தேர்வில் மைனஸ் மதிப்பெண் முறை உண்டு என TNPSC அறிவித்துள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி. தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தப்பட்டுத் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

அவ்வாறு, அரசு துறைகளில் குரூப் 2, 2ஏ பணிகளில் 5529 இடங்களை நிரப்ப அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. சார்பில் வரும் 21ம் தேதி முதல் நிலை தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில் இந்த தேர்வில் மைனஸ் மதிப்பெண் முறை உண்டு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது?-

 • தேர்வர்கள் தங்களது விபரங்கள் அடங்கிய பிரத்யேக விடைத்தாளை மட்டுமே பயன் படுத்த வேண்டும்.

 • எனவே விடைத்தாள் பெற்றதும் அதில் உள்ள தங்களின் விபரங்களை சரிபார்த்த பின்பே பயன்படுத்த வேண்டும்.

 • தவறாக இருந்தால் பயன்படுத்தும் முன்பே மாற்றி கொள்ள வேண்டும்.

 • தேர்வர்கள் அவர்களுக்கான விடைத்தாளுக்கு பதிலாக வேறு விடைத்தாள் பெற்று அதில் தங்களின் பதிவு எண்ணை தவறாக எழுதியிருந்தால் தேர்வரின் மொத்த மதிப்பெண்ணில் இரண்டு மதிப்பெண் கழிக்கப்படும்.

 • மொத்த கேள்விகளுக்குமான விடைக்குறிப்பை 'ஷேடிங்' செய்வதில் சரியான முறையை பின்பற்றாவிட்டால் இரண்டு மதிப்பெண் கழிக்கப்படும்

 • வினாத் தொகுப்பு புத்தகத்தின் எண்ணை சரியாக குறிப்பிடாமலும் விடைத்தாளில் அதற்கான இடத்தில் சரியாக எழுதாமலும் இருந்தால் ஐந்து மதிப்பெண் கழிக்கப்படும்.

 • ரேகை வைக்க முடியாத மாற்று திறனாளிகள் தவிர மற்றவர்கள் தேவைப்படும் இடத்தில் விரல்ரேகை வைக்க வேண்டும். ரேகை வைக்காவிட்டால் இரண்டு மதிப்பெண் கழிக்கப்படும்.

 • எந்த கேள்விக்காவது விடைக் குறிப்பை தேர்வு செய்யாமல் காலியாக விட்டால் 2 மதிப்பெண் கழிக்கப்படும்.

 • தேர்வர்கள் கவனமாக விடைத்தாளை கையாள வேண்டும்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொதுவாகவே போட்டித் தேர்வுகளில் மைனஸ் மதிப்பெண் முறை நடைமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

ஓய்வூதியத் தொகை உயர்வு-மத்திய அரசு நடவடிக்கை!

மூத்த குடிமக்களுக்கு ஏசி ரயிலில் ஓசி பயணம்- அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு!

English Summary: TNPSC Group 2 exam has 'minus' scoring system! Published on: 13 May 2022, 11:40 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.