நம் பாரம்பரிய அரிசி வகைகளில் ஏராளமான நன்மைகளும், சத்துக்களும் கொட்டிக்கிடக்கின்றன. இந்தியாவில் மட்டும் 1,50,000 க்கு மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகள் (Paddy Types) பயிரிட பட்டு வந்தன. தமிழகத்தில் மட்டும் 10,000 க்கும் அதிகமான நெல் வகைகளை நம் முன்னோர்கள் பயன்படுத்தி உள்ளனர்.
பாரம்பரிய வகை நெல்கள் வெள்ளம் (Flood), வறட்சி (drought) போன்ற இயற்கை சீற்றங்களை தாண்டி நின்று செழித்து வளர கூடியவை. அது மட்டுமல்லாது ஏராளமான மருத்துவ குணங்களை உள்ளடக்கியதாக இருந்து. ரசாயன உரங்கள், பூச்சி கொல்லி மருந்துகளின் வரவாலும், அதிக மகசூலுக்கு (High Yield) ஆசைப்பட்டதின் விளைவாலும் இன்று எண்ணற்ற வியாதிகளால் அவதி படுகிறோம்.
ராஜாக்களின் அரிசி
கார் அரிசியை பொதுவாக "ராஜாக்களின் அரிசி (King of Rice)" என்று அழைப்பதுண்டு. ஒரு காலத்தில் அரச பரம்பரையினை சார்ந்தவர்கள் மட்டுமே உண்ண வேண்டும் என்ற சட்டம் இருந்தது. இதில் அத்துணை நன்மைகள் ஒளிந்துள்ளது.இதை கவுனி அரிசி என்றும் அழைப்பதுண்டு. இதில் கருப்பு கவுனி மற்றும் சிவப்பு கவுனி என்று இரு வகைகள் உள்ளன.இவற்றில் கருப்பு கவுனி மிகவும் சிறப்பு வாய்ந்தது.
இன்றும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் காப்பரிசி என்று இந்த கவுனி அரிசியினை உபயோகித்து வருகிறார்கள். குறிப்பாக நாட்டு கோட்டை செட்டியார் வீடுகளில் இந்த அரிசியினை தவறாது பயன் படுத்துவது உண்டு.
கொலஸ்ட்ராலை குறைக்கும் கவுனி அரசி
கருப்பு கவுனி நம் உடலுக்கு ஆரோக்கியத்தையும், ஆற்றலையும் தருகிறது. இந்த கருப்பு கவுனியினை உண்பதால் ரத்த ஓட்டம் சீராகும். இதில் உள்ள "ஆன்தோசயனின்" என்ற நிறமி கொலஸ்ட்ராலை (Fat) கட்டு படுத்தும் தன்மை கொண்டது. அதுமட்டுமல்லாது நீரழிவுநோய், கேன்சர் (Cancer) போன்ற நோய்களை குணப்படுத்தும் சக்தி உள்ளது.
கவுனியில் உள்ள சத்துகள்
கவுனி அரிசியில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. இதில் நார் சத்து, புரத சத்து, கொழுப்பு சத்து, இரும்பு சத்து ஆகியன உள்ளன. இது தவிர கனிம சத்துக்களான தாமிரம், துத்தநாகம், மெக்னிஷியம் (Magnesium), பாஸ்பரஸ், ஜிங் (Zinc), போன்ற கனிமங்களும் நிறைந்துள்ளன.
உட்கொள்ள வேண்டிய முறை
பொதுவாக கவுனி அரிசி வேகுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வதால், இரண்டு முறை நன்றாக கழுவி 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் குக்கர் எனில் 10 முதல் 12 விசில் வரும் வரை வேக விட வேண்டும்.
காலை மற்றும் மாலை நேரங்களில் எளிய உணவாக புட்டு, கஞ்சி என செய்து உண்ணலாம், மதிய வேளைகளில் சதமாக செய்து சாப்பிடலாம். மலசிக்கல் மற்றும் செரிமான பிரச்சனைகளால் (Digestion Problem) அவதி படுபவர்களுக்கு இந்த அரிசி நல்ல தீர்வாகும்.
Anitha Jegadeesan
Krishi Jagran
மேலும் படிக்க
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் கசப்புத் தன்மையில்லாத பழுபாகற்காய்!
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் குளிர்கால உணவுகள்! நீங்களும் சாப்பிடுங்க!
உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும் மூலிகை குணம் வாய்ந்த வெந்தயத்தின் பயன்கள்!