1. வாழ்வும் நலமும்

உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும் மூலிகை குணம் வாய்ந்த வெந்தயத்தின் பயன்கள்!

KJ Staff
KJ Staff
benefits
Credit : Tamil Webdunia

பொதுவாக எல்லாருடைய அஞ்சறை பெட்டியிலும் வெந்தயம் (Fenugreek) இல்லாமல் இருக்காது. இது மசாலா பொருள் மட்டுமல்ல, மூலிகையும் (Herb) கூட. பழமையான மருத்துவச் செடியான வெந்தயம் நம் உடலுக்கு மட்டுமல்ல நம் அழகிற்கும் பல விதமான மாய வித்தைகளை செய்யக்கூடியது.

வெந்தயத்தின் பயன்கள்:

  • வெந்தயத்தில் உள்ள புரதம் மற்றும் நிக்கோடினிக் (Nicotinic) முடி உதிர்வதைத் தடுப்பதும் மட்டுமில்லாமல் பொடுகு பிரச்னையில் இருந்து பாதுகாக்கிறது. இதில் உள்ள லெசிதின் (Lecithin) முடி வறண்டு போகாமல் இருக்கவும், பளபளப்பாகவும் மற்றும் முடியின் வேர் பகுதியை வலுவாக வைத்துக்கொள்ள உதவும்.
  • வெந்தயத்தை இரவே ஊற வைக்கவும். மறுநாள் அதை மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளவும். இதனை தலையில் தடவி பிறகு குளித்தால் தலைமுடி உதிர்வதை கட்டுப்படுத்தி முடி வலுவாக இருக்க உதவும்.
  • வெந்தயத்தை தயிரில் (Curd) ஊற வைத்து அரைத்து தலையில் தடவினால் பொடுகு பிரச்னை இருக்காது. முடியும் பளபளப்பாக இருக்கும்.
  • மருதாணியை தலையில் தடவும் முன் அதனுடன் சிறிதளவு வெந்தய பவுடரை சேர்த்து கலந்து தடவினால் முடி வறண்டு போகாமல் பாதுகாக்கும்.
  • வெந்தயத்தை, ஊற வைத்த தண்ணீரைக் கொண்டு தலைமுடி அலசினாலும் முடி பளபளப்பாகும்.
  • வெந்தயத்தில் நோய் எதிர்ப்பு சக்தி (immunity) அதிகம் உள்ளதால், அது உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும் வல்லமை கொண்டது.
  • இருதய பிரச்னை, மூட்டுவலி மற்றும் உடல் பருமன் (obesity) போன்றவற்றுக்கு நல்ல மருந்து. இதனை தினமும் ஊற வைத்து சாப்பிடலாம். அல்லது அப்படியே தண்ணீர் கொண்டு முழுங்கலாம்.
  • நீரிழிவு (Diabetes) பிரச்னை உள்ளவர்களின் டயட்டில் ஏதாவது ஒரு வகையில் வெந்தயத்தை சேர்த்துக் கொள்வது அவசியம். இதனை பொடித்து மோருடன் கலந்து சாப்பிடலாம். பாலிசிஸ்டிக் ஓவரி (Polycystic ovary) பிரச்னை உள்ள பெண்களும் இதனை சாப்பிட்டு வந்தால் பிரச்னை நீங்கும்.
  • வெந்தயக்கீரையை சமைத்து சாப்பிடலாம். உடலுக்கு மிகவும் நல்லது. கீரையில் போலிக் அமிலம் (Folic acid), விட்டமின் ஏ, விட்டமின் சி, விட்டமின் கே, பொட்டாசியம், கால்சியம், இரும்பு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
  • வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் தங்கும் கெட்ட கொழுப்பு நீக்கும். மேலும் கொழுப்பு நிறைந்துள்ள உணவில் இருக்கும் டிரைகிளரசைட் (Triglyceride) என்ற கொழுப்பினை ரத்தத்தில் சேர்க்காமல் பாதுகாக்கும்.
  • இதில் உள்ள அமினோ அமிலம், உடலில் இன்சுலின் (Insulin) சுரப்பதை அதிகரிப்பது மட்டும் இல்லாமல் உடலில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டோடு வைத்துக் கொள்ள உதவும்.
  • நார்ச்சத்து அதிகம் இருப்பதால், உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்னை ஏற்படாமல் பாதுகாக்கும்.
  • அஜீரணத்தால் ஏற்படும் வயிற்றுவலிக்கு வெந்தய கஷாயம் மிகவும் நல்லது. வெந்தய பவுடரை தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி காலை வெறும் வயிற்றில் குடித்தால் மலச்சிக்கல் பிரச்னை நீங்கும். உணவில் வெந்தயத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.

    Krishi Jagran
    ரா.வ. பாலகிருஷ்ணன்

    மேலும் படிக்க

உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் சிறந்த உணவுகள்!

நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் குளிர்கால உணவுகள்! நீங்களும் சாப்பிடுங்க!

English Summary: Benefits of Herbal Medicinal Fenugreek, which removes toxins from the body! Published on: 17 December 2020, 09:35 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.