நோய் எதிர்ப்பு சக்தி முதல் கல்லீரல் பிரச்சனை வரை அனைத்து வகையான உடல் பிரச்சனைக்கும் தீர்வாக அமைவது இந்த பழம் ஆகும். இது அபூர்வ மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கிருக்கிறது. அந்த பழம் தான் மங்குஸ்தான் ஆகும். இப்பழங்களின் மருத்துவ குணங்களைப் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
மேலும் படிக்க: பாரம்பரிய விவசாயத்திற்கு மானியம்|மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட சூப்பர் தகவல்!
மங்குஸ்தான் பழமா? என்றொரு பழம் இருக்கிறதா என நினைப்பவர்கள் அதிகம் இருக்க நேரிடும். சிலர் அப்படி ஒரு பழத்தின் பெயரைக் கேள்விப்பட்டுக்கூட இருக்க மாட்டார்கள். ஆனால், இந்த பழம் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகம் விளைகின்ற பழமாக இருக்கிறது. இது பலவகையான மருத்துவப் பலன்களைக் கொண்டுள்ளது. அத்தகைய மருத்துவப் பலன்களை இப்போது பார்க்கலம.
நோய் எதிர்ப்பு சக்தி: மங்குஸ்தான் பழத்தில் “வைட்டமின் சி” சத்து அதிகம் இருப்பதால் உடலுக்கு நன்மை பயக்கிறது. வைட்டமின் சி சக்தி உடலில் சரியான அளவில் இருந்தால்தான் உடலின் நோய் எதிர்ப்பு திறன் வலுவுடன் இருக்கும் எனக் கூறப்படுகிறது. அதோடு, உடலை வெளியிலிருந்து தாக்க வரும் நோய் நுண்கிருமிகளை எதிர்த்து போராட உடலைத் தயார் செய்கிறது. எனவே அனைத்து வயதினரும் மங்குஸ்தான் பழங்களை அடிக்கடி உட்கொள்வது மிகந்த பலனை அளிக்கும்.
வயிற்று நலம் மற்றும் செரிமான சக்தி: மங்குஸ்தான் பழத்தில் நார்ச்சத்து அதிகம் நிறைந்து இருக்கிறது. ஆகவே இந்த மங்குஸ்தான் பழங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு நீண்ட நாட்களாக இருக்கக் கூடிய மலச்சிக்கல் பிரச்சனைகளும் நீங்கும். வயிற்றில் உணவைச் செரிமானிக்க உதவும் ஜீரண அமிலங்களின் உற்பத்தியைத் தூண்டும் திறன் பலாப்பழத்திற்கு இருக்கிறது. குடல்களில் ஏற்படும் நோய்களைப் போக்கி, குடல்களின் நலன் மற்றும் சீரான இயக்கத்திற்கு இப்பழம் உதவி புரிகிறது.
மேலும் படிக்க: ஆழ்குழாய் கிணறு அமைக்க 100% மானியம்|ஆட்சியர் அறிவிப்பு|விவசாயிகளுக்கு அழைப்பு!
மலச்சிக்கல் பிரச்சனைக்குத் தீர்வு: உணவுகளைச் சாப்பிட்ட பின்னர் சரியான அளவு நீர் அருந்தாமல் இருப்பது, இரவில் நெடு நேரம் கண் விழித்திருப்பது, சாப்பிட்டதற்கேற்ற உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது முதலான காரணங்களால் மலச்சிக்கல் ஏற்படலாம். அவ்வாறு இருப்பவர்கள் மங்குஸ்தான் பழங்களை அல்லது மங்குஸ்தான் பழ ஜூஸ்-ஐ எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.
மேலும் படிக்க: விவசாயிகளுக்கு ரூ.2500 மானியம்|பாரம்பரிய சாகுபடிக்கு மானியம் அறிவிப்பு!
கொலஸ்ட்ரால்: உடலில் நன்மை பயக்கும் கொழுப்புகள் அளவுக்கு அதிகமாகச் சேர்ந்து விடுவததே கொலஸ்ட்ரால் ஆகும். இந்த கொலஸ்ட்ரால் பிரச்சனையினைப் போக்க மங்குஸ்தான் பழங்களை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. இதிலுள்ள பெக்டின் எனப்படும் நார்ச்சத்துப் பொருள், உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புகளைக் கரைத்துக் கொலஸ்ட்ரால் அளவினைச் சமப்படுத்துகிறது.
மேலும் படிக்க: PM Kisan ரூ.2000! வெளியான புதிய அப்டேட்!
கல்லீரல்: மது பழக்கம் கொண்டவர்கள் அதிகளவில் மதுவினை அருந்துவதால் சில சமயங்களில் அவர்களின் கல்லீரலில் வீக்கம் ஏற்பட்டு பாழாகி விடும். இந்த கல்லீரல் வீக்கத்தினைப் போக்கவும், அதில் சேர்ந்திருக்கும் நச்சுகளை நீக்குவதற்கும் தினமும் ரெகுலராகச் சில மங்குஸ்தான் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குணமாகும் எனக் கூறப்படுகிறது. அதோடு, கல்லீரலில் சேர்ந்திருக்கும் போதை பொருட்களின் நச்சுக்களை நீக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க