மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 11 January, 2022 5:13 PM IST
From indigestion to skin radiance, the solution is betel leaf!

வெற்றிலை (Betel Leaf) என்பது நமது தமிழ் சமூகத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாகும். மங்களத்தின் அடையாளமாக இருந்தாலும், இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கி உள்ளது. குறிப்பாக செரிமானம் தொடர்பான அனைத்து பிரச்னைகளும் தீர்வாக கூறப்படுகிறது. மேலும், இது சரும பிரச்சனைகளுக்கு அளிக்கும் தீர்வை அறிந்துக்கொள்ளலாம். முதலில்,

அஜீரண கோளாறுக்கு 6 வகையான வெற்றிலையின் பயன்பாடு

  • அஜீரணத்தை நீக்கி செரிமானத்தை (Digestion) தூண்டும் வெற்றிலை, உடலில் வெப்பத்தை தருவதோடு தாய்ப்பால் சுரப்பியாகவும், வாய்நாற்றத்தை போக்குவதோடு, சிறுநீர் பெருக்கியாகவும் செயல்படுகிறது.
  • வெற்றிலையை இடித்து இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து, அந்த நீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
  • வெற்றிலை வயிற்றில் இருக்கும் வாயுவை வெளித்தள்ளும் தன்மை கொண்டது.
  • வெற்றிலைச்சாற்றுடம் நீர் கலந்த பாலையும், தேவையான அளவு கலந்து பருகினால் சிறுநீர் நன்கு வெளியேறும்.
  • கடுமையான வயிற்றுவலிக்கு ஒரு வெற்றிலையில் ஐந்து மிளகு வைத்து மென்றுச் சாப்பிட உடனடியாக வலி நீங்கும்.
  • துளசி, வெற்றிலை, இஞ்சி, மிளகு இவற்றை சம அளவு எடுத்து அரைத்து தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை காலை மாலை என இரு வேலைகள் குடித்து வர, வயிற்றுக் கோளாறுகள் மற்றும் சளித்தொல்லை நீங்கும்.

இவை அனைத்தும், நம் முன்னோர்களின் பழக்க வழக்கத்தில் இருந்தனவே. நாம் அதை சரிவர பயன்படுத்தவில்லை என்பதுதான் உண்மையாகும்.

அடுத்து, வெற்றிலையின் பயன்பாடு அனைத்து விதமான சரும பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வாக எப்படி அமைகிறது என்று பார்ப்போம்.

சருமத்தில் வெற்றிலையின் பயன்பாடு (The application of betel on the skin)

  • வெற்றிலை நீரால் முகத்தை சுத்தம் செய்வதன் மூலம் பல வகையான அலர்ஜிகள் குணமாகும். பொதுவாக, வெற்றிலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இது தோல் எரிச்சல், வலி ​​மற்றும் அரிப்பு போன்ற பல பிரச்சனைகளுக்கு நிவாரணியாக செயல்படும்.
  • வெற்றிலையை உலர்த்தி பொடி செய்ய வேண்டும். அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் தேன் கலந்து பேஸ்டாக்க வேண்டும். இந்த பேஸ்ட்டை சருமத்தின் பாதிக்கப்பட்ட பகுதியில் 2 நிமிடம் வைத்திருந்த பிறகு, குளிர்ந்த நீரில் சருமத்தை சுத்தம் செய்யவும்.
  • ஒரு கைப்பிடி வெற்றிலையை அரைத்து சருமத்தில் பாதிக்கப்பட்ட இடத்தில் நன்கு தடவவும். பின் 5 நிமிடம் கழித்து சாதாரண நீரில் முகத்தை கழுவ, சருமத்தில் பொலிவை காணலாம்.
  • வெற்றிலையை வேகவைத்து அதன் நீரால் முகத்தைக் கழுவுவதும் நல்ல பலன் தரும்.
  • வெற்றிலைப் பொடி, முல்தானி மிட்டி, கடலை மாவு, ரோஸ் வாட்டர் ஆகியவற்றைக் கலந்து முகத்தில் தடவ வேண்டும். 10 நிமிடம் கழிந்த பின் சுத்தமான தண்ணீரில் முகத்தை கழுவவும். இதுவும் முகத்தின் வறட்சியை குறைக்க உதவுகிறது.

இவ்வாறு, வெற்றிலையில் எண்ணற்ற பயன்கள் உள்ளன. வெற்றிலையை சருமத்தில் பயன்படுத்துவதால், தோல் தொற்று மற்றும் ஒவ்வாமை பிரச்சனைகளை தீர்க்க வழிவகுக்கிறது.

இப்போது, குறிப்பிட்ட, அனைத்து பயன்பாடுகளும் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்கள் ஆகும். மேலும், ஒவ்வொரு சருமத்தின் விளைவும் வெறுபாட வாய்ப்பிருப்பதால், மருத்துவ அலோசனைக்கு பிறகு பயன்படுத்தவும்.

மேலும் படிக்க:

2022: பொங்கல் பண்டிகை பற்றிய குட்டி ஸ்டோரி!

Flipkart Mobile Bonanza Sale: ரூ.1600க்கு Samsung இன் 5G போன்! விவரம் உள்ளே

English Summary: From indigestion to skin radiance, the solution is betel leaf!
Published on: 11 January 2022, 05:06 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now