Health & Lifestyle

Wednesday, 02 March 2022 11:37 AM , by: Elavarse Sivakumar

நம்மைக் கவரும் உணவுகள் என பல இருந்தாலும், உடல் ஆரோக்கியத்திற்கு என எண்ணும்போது, பழங்கள் முக்கிய இடம் பிடிக்கின்றன. பழங்களைச் சாப்பிடுவதால், ஆரோக்கியம் மட்டுமல்ல, அழகும், இளமையும் கூடும் என்பதால், அனைவரின் கவனமும் பழங்கள் பக்கம் திரும்புவது வாடிக்கை.
இருப்பினும் அவ்வாறுப், பழங்களைச் சாப்பிடுவதற்கு பதிலாக அதனை ஜூஸாக தயாரித்து ருசிக்கவே பலரும் விரும்புகிறார்கள். காலையில் எழுந்ததும் அந்த நாளை உற்சாகமாகத் தொடங்குவதற்காக பழச்சாறு பருகுபவர்களும் இருக்கிறார்கள். அது ஆரோக்கியமானதாக தோன்றினாலும் அதில் சர்க்கரை அதிகம் கலந்திருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பழச்சாற்றைச் சரியான முறையில் பருகினால் பாதி நன்மையே கிடைக்கும்.

பழங்களை ஜூஸாக்கும் செயல்முறையின்போது அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை இழக்க நேரிடும். அதிலும் நீரிழிவு நோயாளிகளுக்கு பழச்சாறு சிறந்த தேர்வாக அமையாது. ஏனெனில் அதிலிருக்கும் சர்க்கரை ரத்த சர்க்கரை அளவை உயர்த்திவிடும். எடை அதிகரிப்புக்கும் வழிவகுக்கும். பழச்சாறுக்கும், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய் போன்ற பாதிப்புகளுக்கும் தொடர்பு உண்டு. எனவே பழச்சாறு பருகுவது நல்ல யோசனை அல்ல.

பழங்களை அப்படியேச் சாப்பிடுவதே சிறந்தது. இதற்கு
5 காரணங்கள் கூறப்படுகின்றன. 

அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள்:

பழச்சாறு தயாரிக்கும்போது பழங்களின் தோலை அகற்றுவோம். ஆனால் பல பழங்களின் கூழ், தோலில்தான் வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் கலந்திருக்கும். பழச் சாறாக பிரித்தெடுக்கும்போது இந்த ஊட்டச்சத்துக்கள் வீணாகி விடுகிறது. உதாரணமாக ஆரஞ்சு பழங்களில் பிளவனாய்டுகள் அதிகளவில் இருக்கும். ஜூஸ் பிழியும்போது அது கூழில் கலந்து குப்பைக்கு சென்றுவிடுகிறது.

நார்ச்சத்து

பழச்சாறு பருகுவதில் மற்றொரு தீமை என்னவென்றால் அதில் நார்ச்சத்து முழுமையாக இருக்காது. பழங்களை ஜூஸாக பிழியும்போது அதிலிருக்கும் சர்க்கரை சாறில் கலக்கும். நார்ச்சத்து நீங்கிவிடும். அதனால்தான் பழங்களை உட்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்கள். அதை அப்படியே சாப்பிடும்போது அதிலிருக்கும் நார்ச்சத்து முழுமையாக உடலுக்குள் சென்றுவிடும். பழத்தின் தோல் மற்றும் கூழ் ஆகியவற்றில் நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் பழச்சாற்றை விட பழம் சிறந்ததாக கருதப்படுகிறது. பழங்களாக சாப்பிடுவது, செரிமான செயல்முறையை எளிதாக்கவும், மலச்சிக்கலில் இருந்து விடுபடவும் உதவி செய்கிறது.

மெல்லுதல்

உணவை நன்கு மென்று சாப்பிடுவதே நல்லது. அப்படி உணவை மெதுவாகவும், சரியாகவும் மெல்லுதல் பற்கள் மற்றும் வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி செரிமானத்திற்கும் துணை புரியும். அவ்வாறு மென்று சாப்பிடுவது அதிகப்படியான உணவை உட்கொள்வதைத் தடுக்கிறது. அதன் மூலம் உடல் எடை அதிகரிப்புத் தடுக்கப்படுகிறது. எனவே உணவைக் குறைந்தது 24 முறை மென்று சாப்பிட வேண்டும் என்று உணவியல் நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

 

பசியை போக்கும்

பசியைப் போக்க சிறந்த வழி பழங்கள் சாப்பிடுவதுதான். சிற்றுண்டி நேரத்தில் பழங்கள் உண்ணும் போது பசி அதிகம் எடுக்காது. அதனால் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது தவிர்க்கப்படும். அத்துடன் பழங்கள் அனைத்து உடல் செயல்பாடுகளையும் எளிதாக்கும். பழங்கள் அதிக கலோரிகளையும் வழங்குவதில்லை. எனவேக்  முடிந்தவரை பழச்சாற்றுக்குப் பதிலாகப் பழங்களைச் சாப்பிடுவதே சரியானது.

தகவல் 
மருத்துவர் ஜினல் படேல்.

மேலும் படிக்க...

சர்க்கரை ரொம்பப் பிடிக்குமா? புற்றுநோய்க்கு வாய்ப்பு அதிகம்!

இரவில் தூங்கும் முன்பு 2 கிராம்பு+Hot water- ஆச்சர்யப்படுத்தும் நன்மைகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)